ஆம், பெற்றோர் சம்மதத்துடன் ஐஸ்வர்யாவை மணக்க இருக்கிறேன் : 2ம் திருமணம் பற்றி மனம் திறந்த விஜய்
தனது இரண்டாவது திருமணம் பற்றி அறிவித்துள்ளார் ஏ.எல்.விஜய்.
சென்னை: தனது இரண்டாவது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய், தமிழில் நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகன், தலைவா, சைவம், தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
தலைவா மற்றும் தெய்வதிருமகன் படங்களில் நடித்த அமலாபாலுடன் விஜய்க்கு காதல் உண்டானது. பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.

விவாகரத்து:
ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு இருவருமே தங்களது பணியில் பிசியாகி விட்டனர்.

மருத்துவர்:
இந்நிலையில், தற்போது விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. அதனை அவரே அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த மருத்துவரான ஐஸ்வர்யாவை அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அடுத்த மாதம் 11ம் தேதி அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

தனித்துவமானது:
அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டியே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அமலா பாலுக்கு தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது, தனது மனவலிமையை மற்றவர்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மகிழ்ச்சி அடைகிறேன்:
தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு என் வாழ்க்கையின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். எனது குடும்பத்தினர் என் வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என விஜய் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











