பசி, காமத்தை அடக்கிட்டு.. திருட்டுப்பட்டம் வாங்க சினிமாவுக்கு வரல - ஏ.ஆர். முருகதாஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனது படங்கள் முலம் அரசியல் கருத்துக்களை மிகவும் தைரியமாக பேசிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. ரமணா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை விஜயகாந்த்தின் மறைவின்போது இணையத்தில் லட்சக்கணக்காணோர் பகிர்ந்திருந்தனர். இவரது இயக்கத்தில் ரமணா, 7ஆம் அறிவு, கத்தி, சர்கார் போன்ற படங்கள் இவரது படங்களில் அரசியல் குறித்து பேச
ியது. இதில் 7ஆம் அறிவு படத்தில் இடம் பெற்றிருந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் கண்டனங்களுக்கு ஆளானது. அதேபோல் துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததிற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அதன் பின்னர் வெளியான கத்தி, சர்கார் படங்களில் தமிழ்நாடு அரசியலைப் பேசி தன்மீதான விமர்சங்களில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

சர்கார் படம்: இந்நிலையில் இவரது இயக்கத்தில் கடந்த 2018அம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் அதிமுக கட்சியை மறைமுகமாக சாடியது. அந்த படத்தின் ரிலீஸின் போது படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் கூறினார். இந்த விவகாரம் முதலில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து இறுதியாக நீதிமன்றம் வரை சென்றது.
முருகதாஸ் பேட்டி: இதில் ஏ.ஆர். முருகதாஸ்க்கும் ராஜேந்திரனுக்கும் சுமூகமான முடிவு ஏற்பட்டதால் படத்தில் ராஜேந்திரன் என்பவரது பெயரும் டைட்டில் கார்டில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தது. இந்த பிரச்னை இவ்வாற முடிக்கப்பட்ட பின்னர்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த பிரச்னைகள் முடிவதற்கு முன்னர் இயக்குநர் முருகதாஸ் ஒரு தனியார் யூட்டுப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

செட்டில்மெண்ட்: அந்த பேட்டியில், " சர்கார் பட கதை விவகாரத்தில் இயக்குநர் பாக்யராஜ் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்துவிட்டார். எனது கதையின் கருவும் ராஜேந்திரன் என்பவரின் கதையின் கருவும் ஒரே மாதிரி இருக்கின்றது. எனவே நீங்கள் ராஜேந்திரனுக்கு எதாவது செட்டில்மெண்ட் செய்து விடுங்கள் எனக் கூறுகின்றார்.
தவவாழ்வு: 11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கதையும் எனது கதையும் எப்படி ஒன்றாக முடியும். இயக்குநர் பாக்க்யராஜைப் பார்த்துத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதற்காக அவர் எனக்கு திருட்டுப் பட்டம் கொடுத்தால் வாங்கீட்டு போக எனது அப்பா அம்மா என்னைப் பெத்துவிடல. நான் சினிமாவுக்கு அதுக்காக வரவில்லை. இங்கு பசியை அடக்கி, தூக்கத்தை அடக்கி, காமத்தை அடக்கி தவவாழ்வு வாழ்ந்து சினிமாவுக்கு வந்துள்ளேன். போராடி போராடி 18 ஆண்டுகளாக இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இப்போது பாக்கியராஜ் என்னைக் கூப்பிட்டு திருட்டுப் பட்டம் கொடுத்தால் அதனை தலையை ஆட்டிட்டு போவதற்கு நான் இங்கு வரவில்லை" எனக் கூறியுள்ளார்.

அதிருப்தி: இந்த வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தின்போது இயக்குநர் பாக்யராஜ் மீது இயக்குநர் முருகதாஸ் தனது அதிருப்திகளைத் தெரிவித்திருந்தார். சர்கார் படம் வெளியான பின்னர் படத்தில் இடம் பெற்றிருந்த சில வசனங்களும் காட்சிகளும் சர்ச்சைக்குரியதாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











