இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ரீ ரிலீஸ் இயக்குநராக கெத்து காட்டும் ஏ.ஆர். முருகதாஸ்!

By Mohan Raj

சென்னை: சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா, உலக நாயகன் கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு, தளபதி விஜயின் கில்லி, அஜித்தின் தீனா உள்ளிட்ட திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் விஜயின் கில்லி ரீ ரிலீசில் மட்டும் ரூபாய் 15 கோடிக்கு மேல் வசூல் செய்தது. வரும் 22 ஆம் தேதி தனது ஐம்பதாவது பிறந்தநாளை விஜய் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் விஜயின் துப்பாக்கி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு முன்னர் 60களில் பிறந்தவர்களின் எவர் க்ரீன் பேவரெட் படங்களாக இருந்த நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை, மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எல்லா நடிகர்களும் தங்களது பல படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இன்று அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசனின் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இத்துடன் 2005ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளியான கஜினி திரைப்படமும் வெளியாகியுள்ளது. கஜினி திரைப்படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளாவிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Director A R Murugadoss Re-Release Movies Tamil Cinema Deena Ghajini Thuppakki Ajith Kumar Vijay Suriya Ramana

ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் சினிமாவில் தனது பாணி சினிமாவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸும் ஒருவர். 2001ஆம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக ஜொலித்துக்கொண்டு இருக்கும் முருகதாஸ் இதுவரை, தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அதிரடி ஆக்‌ஷன் படத்தினை இயக்கி வருகின்றார்.

ரீ ரிலீஸில் சம்பவம் செய்யும் ஏ.ஆர். முருகதாஸ்

ரீ ரிலீஸ் தமிழ் சினிமா வட்டாரத்தில் ட்ரெண்ட் ஆகிவருவது ஒருபுறம் இருந்தாலும் அது கதாநாயகர்களை மைய்யப்படுத்தியதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சைலண்ட்டாக சம்பவம் செய்து வருகின்றார். அதாவது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் முதல் படம் தீனா. அஜித்குமார் மற்றும் லைலா நடிப்பில் வெளியான இந்த படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது. தீனா திரைப்படம் அஜித்குமாரின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்குப் பின்னர்தான் அஜித் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். மேலும் இந்த படத்தில் இருந்துதான் அவருக்கு தல என்ற அடைமொழி ரசிகர்களால் வைக்கப்பட்டது. அதேபோல் இன்று ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கஜினி திரைப்படத்திற்குப் பின்னர் சூர்யாவின் சினிமா வர்த்தகம் வேறு தரத்திற்கு உயர்ந்தது.

Director A R Murugadoss Re-Release Movies Tamil Cinema Deena Ghajini Thuppakki Ajith Kumar Vijay Suriya Ramana

துப்பாக்கி ரீ ரிலீஸ்

அதேபோல் தளபதி விஜயின் 50வது பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்திலும் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யபடவுள்ளது. தனது 50வது படம் தோல்வி, அதன் பின்னர் வெளியான படங்கள் பெரிய அளவில் ஓடாததால், ஒருமாஸான வெற்றிப் படத்திற்காக காத்திருந்த விஜய்க்கு இந்த படம் மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. இந்த படத்தையும் இயக்கியது ஏ.ஆர். முருகதாஸ் தான். இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் அனைத்துமே நடிகர்களின் திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த படங்கள் ஆகும். அதன் அடிப்படையில் மாஸ் ஹீரோக்களின் திரை வாழ்க்கையில் தரமான படங்களை முருகதாஸ் இயக்கியுள்ளார் என்பது தெளிவாகின்றது.

ரமணா ரீ ரிலீஸ்க்காக காத்திருக்கும் ரசிகர்கள்

நடிகர் சங்க முன்னாள் தலைவரும் மறைந்த தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ரமணா படத்தில் இடம் பெற்ற காணொளிதான். இந்தப் படத்தையும் ரீ ரிலீஸ் செய்வார்களா என்ற ஏக்கம் கேப்டன் ரசிகர்கள் மத்தியில் இன்றைக்கும் உள்ளது. இந்தப் படத்தை இயக்கியதும் ஏ.ஆர். முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X