தளபதி விஜய் இன்னும் மாறவே இல்ல.. அப்படியே இருக்கிறார்..ஏ.வெங்கடேஷ் பெருமிதம்
சென்னை : முன்பு எப்படி பார்த்தேனே அதேபோலத்தான் இப்பவும் விஜய் இருக்கிறார் என்று இயக்குனர் ஏ.வெங்கடேஷ் பெருமிதத்துடன் கூறினார்.
நடிகர் மற்றும் இயக்குனரான ஏ.வெங்கடேஷ் சமீப காலமாக படம் இயக்குவதை விட்டு விட்டு தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அங்காடி தெரு படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டபட்டது இதை தொடர்ந்து தற்போது வரை நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஏ.வெங்கடேஷ் .

தற்போது இவர் அல்டி என்ற படத்தில் ஜாலியான சாதுவான அப்பாவாக நடித்து இருக்கிறார். இதுவரையிலும் வில்லனாகவும் முரட்டு தனமான கதாபாத்திரத்திலே நடித்து வந்தவர் முதல்முறையாக ஜாலியான அப்பாவாக நடித்திருக்கிறார். அல்டி படத்தை அறிமுக இயக்குனர் ஹுசைன் இயக்கியுள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
ஏ.வெங்கடேஷ் தளபதி விஜயை வைத்து செல்வா, நிலாவே வா மற்றும் பகவதி என மூன்று படங்களை இயக்கியவர். அல்டி பட விளம்பரத்தில் பேசிய போது அவர், விஜய் இன்றளவும் மாறவேவில்லை, விஜயுடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்த போது,ஆரம்பகாலத்தில் இருந்ததை போலதான் இப்போது இருக்கிறார் என்று கூறினார்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.

தளபதி விஜய் பகவதி படத்திற்கு பின் தான் மிக பெரிய ஆக்ஷ்ன் ஹீரோவாக உருமாறினார். இதனால் அந்த பெருமை இயக்குனர் ஏ.வெங்கடேஷையே சேரும் விஜய் அந்த சமயங்களில் அதிகபடியான காதல் படங்களிலே தான் நடித்து வந்தார். பகவதி படத்தையே மிகுந்த குழப்பத்தில் தான் நடிக்கவே ஒத்துகொண்டாராம். ஆனால் இயக்குனர் வெங்கடேஷ் ஒரு சில ஆராய்ச்சிகளை செய்து விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர் ஆக்ஷ்ன் படத்தில் நடித்தால் ஒத்துகொள்வார்களா என எண்ணி தான் படக்கதையை விஜயிடம் சொன்னதாகவும் விஜய் இந்த கதையில் நடித்தால் கட்டாயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று விஜயிடம் கூறியதாகவும் ஏ.வெங்கடேஷ் கூறினார் .

அல்டி படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது முதல்முறையாக நடன இயக்குனர் ராப்ர்ட் மாஸ்டர் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி நாயகனாக நடித்து இருக்கிறார் மேலும் மனிஷா ஜித் ,சென்ட்ராயன், பசங்க சிவகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











