கில்லி வெற்றிக்கு விஜய் காரணமில்லை.. ரொம்ப பயந்தாரு.. பகவதி பட இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பளிச் பேட்டி!
சென்னை: கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 30 கோடி வரை அதன் வசூல் சென்று கொண்டிருக்கும் நிலையில், கில்லி படத்தின் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும் காரணமில்லை என பகவதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் ஏ. வெங்கடேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் கடந்த மாதம் மீண்டும் ஒரு வெளியீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெளியான பல புதிய படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூலை ஈட்டாத நிலையில் பழைய சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தியேட்டர் ஓனர்கள் வெளியிட்டு கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

அந்த வரிசையில் கடந்த மாதம் இறுதியில் வெளியான கில்லி திரைப்படம் சுமார் 30 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை பகவதி படத்தை இயக்கிய இயக்குநர் ஏ. வெங்கடேஷ் அளித்துள்ள புதிய பெட்டியில் பல தகவல்களை கூறியுள்ளார்.
ஆக்ஷன் ஹீரோவாக மாற்றினேன்: காதல் படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் முதன்முறையாக தனது இயக்கத்தில் தான் ஆக்சன் ஹீரோவாக மாறினார் என இயக்குநர் ஏ. வெங்கடேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அந்த படம் உருவாக்கும் போது எடிட்டர் உள்ளிட்ட பலரும் இதெல்லாம் விஜய்க்கு ரொம்ப ஓவரா இருக்கு சார் எனக் கூறினர். ஆனால், நான் தான் விஜய்க்கு இதெல்லாம் செட்டாகும் என்றேன் என ஏ. வெங்கடேஷ் பேட்டி அளித்துள்ளார்.

விஜய்யே பயந்தார்: அண்ணே இதெல்லாம் வொர்க்கவுட் ஆகுமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்குற மாதிரி தெரியுதே என ஒரு சில இடங்களில் விஜய்யே பயந்தார். நான் தான் இந்த படம் உங்களை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் என கூறினேன். அதன் பின்னர் நடிகர் விஜய் ஆக்ஷன் ஹீரோவாகவே தற்போது வரை அசத்தி வருகிறார் என கூறினார்.
கில்லி வெற்றிக்கு உண்மையான காரணம்: "அப்படி போடு" பாடலோ நடிகர் விஜய்யையோ கில்லி படத்தின் வெற்றிக்கு காரணம் இல்லை. அந்த படத்திலிருந்து கன்டன்ட் தான் காரணம். பொதுவாக வெற்றி பெறும் அனைத்து படங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை புதுசா இருக்கும். ஏதாவது ஒரு மேஜிக் அதில் இருக்கும். கில்லி ரீ ரிலீஸ் ஆகியே ரசிகர்கள் இப்படி கூட்டம் கூட்டமா போய் பார்க்குறாங்கனா அந்த படத்தின் கன்டன்ட் தான் காரணம். வில்லன் ஊருக்கே சென்று வில்லன் கட்டிக்கப் போற பொண்ணை தூக்கிட்டு வந்துட்டு, அந்த பொண்ணை தேடுற அப்பா போலீஸுக்கே தெரியாமல் அவர் வீட்டில் மறைத்து வைத்தது எல்லாம் தான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











