சினிமாவில் ஆண்களும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணணும்.. இயக்குநர் அமீர் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: இயக்குநர் அமீர். சினிமாவில் பாரதிராஜா, மகேந்திரா போல் இயக்குநராக வேண்டும் என்ற லட்சிய கனவோடு சென்னை வந்தார். பின், தனது அண்ணனின் நண்பன் இயக்குநர் பாலாவின் சேது, நந்தா படத்தில் உதவி இயக்குநராகவும் அசோசியேட் இயக்குநராகவும் பணியாற்றினார். இன்று சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் இவர், சினிமாவில் ஆண்களும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர், நந்தா படத்தில் தனது பெயரை பாலா அசோசியேட் இயக்குராக போடவில்லை என்ற கோபத்தில் அவரிடம் இருந்து விலகினார். இதையடுத்து, அமீர், சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே என்ற படத்தை இயக்கினார். இப்படம் சூர்யாவின் கேரியரில் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், லாபத்தையும் ஈட்டித்தந்தது. இதனைத்தொடர்ந்து டீம் ஒர்க் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய அமீர், தனது நண்பர்களின் உதவியுடன் ராம் படத்தை எடுத்து முடித்தார். இப்படம் எடுத்ததன் மூலம் 55 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதை சிவகுமாரின் குடும்பம் அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குநர் அமீர்: இதை ஈடு கட்டத்தான் சிவக்குமாரின் மகன் கார்த்தியை கதாநாயகனாக்கி பருத்திவீரன் படத்தை இயக்கினார். 2007ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே கார்த்தியின் முத்திரை பதிக்கும் நடிப்பை வெளியில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் அமீருக்கு உண்டு. இப்படம் திரையரங்குகளில் 350 நாட்கள் ஓடி மெகா ஹிட்டானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
பருத்திவீரன் பஞ்சாயத்து: பருத்திவீரன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கு 10 மடங்கு லாபத்தையும் பெற்றுத்தந்தது. இதில், பருத்திவீரன் படத்திற்குத் தான் செலவு செய்த தொகையைத் தராததால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அமீர். இந்த பஞ்சாயத்து தான் கார்த்தியின் 25ஆவது படமான ஜப்பான் விழாவில், அமீர் அழைக்கப்படாதது சென்சேஷன் ஆக, பருத்திவீரன் பட விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. அப்போதிருந்து கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் அமீர்.
இயக்குநர் அமீர்: இந்நிலையில், அமீர் அளித்துள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், நான் எப்போதும் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறேன். இதுவரைக்கும் ஐந்து படம் தான் எடுத்து இருக்கேன், சென்னையில் சொந்தவீடு வாங்கல என இது எதுவுமே என்னை டிஸ்டப் பண்ணவில்லை, இந்த வாழ்க்கையை நான் ஜாலியாகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். என் மனைவியோ என் மகனோ என்னை எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை அவர்களை நான் சினிமாவிற்கு அந்த பக்கத்தில் வைத்து இருக்கிறேன்.
அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு: ஆனால், சினிமாவில் இருப்பவர்களை நீங்க அப்படி இருங்க இப்படி இருங்க என்று கேட்பார்கள். அண்மையில் ஒரு தயாரிப்பாளர் என்னிடம் கொஞ்சம் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா நீங்க கோடியில் சம்பாதிக்கலாம் என்றார். நான் உடனே சினிமாவில் பெண்களுக்குத்தான் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு என்றால், ஆணுக்கு என்ன அட்ஜெஸ்ட்மென்ட் என்று கேட்டேன். அதற்கு அவர் ஹீரோ சொல்வதற்கு எல்லாம் சரி சரி என்று தலையாட்ட சொன்னார். இதற்கு பெயர் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை என்னுடைய தன் நம்பிக்கையும் அறிவையும் நான் யாரிடத்திலும் அடமானம் வைக்க மாட்டேன் என்று இயக்குநர் அமீர் அந்த போட்டியில் மிகவும் அழகாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications