படப்பிடிப்பு முடிந்து வந்த.. தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டில் தனிமை!
டெல்லி: தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
பிரபல இந்தி பட இயக்குனர் ஆனந்த்.எல்.ராய். இவர் இந்தியில் தனு வெட்ஸ் மனு உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.
பல இந்தி படங்களை தயாரித்து உள்ளார். தனுஷ் நடித்த ரான்ஜனா என்ற படத்தை இயக்கி இருந்தார்.

அட்ராங்கி ரே
இப்போது அக்ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் நடிக்கும் அட்ராங்கி ரே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

ஷூட்டிங் தொடங்கியது
தனுஷ், சாரா அலிகான் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் கொரோனா லாக்டவுனால் ஷூட்டிங் தடைபட்டது. லாக்டவுனுக்கு பிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.

கொரோனா தொற்று
சில தினங்களுக்கு முன்பு, இந்தப் படத்தில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாயின. இதனிடையே இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

அறிகுறி இல்லை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. எந்த அறிகுறிகளும் இல்லை. நலமாக இருக்கிறேன். அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு வழிகாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தனுஷுக்கு நெகடிவ்
ஆனந்த் எல்.ராய்க்கு கொரோனா உறுதியானதை அடுத்து, படக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வார்கள் எனத் தெரிகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ், படப்பிடிப்பை முடித்து திரும்பியதும் கொரோனா சோதனை செய்தார். அவருக்கு நெகடிவ் என்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குடும்பத்தைப் பார்க்க சென்றார்.


Click it and Unblock the Notifications











