"விஜய் சேதுபதி பீடா போட்ட மாதிரி பேசுவாரு.." - ஆடியோ வெளியீட்டில் பிரபல இயக்குநர்!
Recommended Video

சென்னை : அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி பேசுவது பீடா போட்ட மாதிரி இருக்கும் என தனது அசிஸ்டென்ட் டைரக்டர் கூறியதாகக் கூறினார்.
'கோ' படத்துக்கு ஜீவாவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மூன்று நான்கு பேரை முடிவு செய்ததாகக் கூறினார் கே.வி.ஆனந்த். ஜீவாவை நடிக்க வைக்கலாம் என ஒருவர் சொன்னபோது இன்னொரு அசிஸ்டென்ட் டைரக்டர் 'முதல்வரையே முடிவு பண்ற ரோல் அது.. சின்னப்பையன் மாதிரி இருக்காரு ஜீவா. சரியா வராது' எனக் கூறினாராம்.

'கவண்' படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை முடிவு செய்தபோது, ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர், 'டி.வி ஆங்கர்னா பேசுறது கணீர்னு வார்த்தைக்கு வார்த்தை தெளிவா இருக்கணும்; பீடா போட்ட மாதிரி பேசுவாரு விஜய் சேதுபதி' என விஜய் சேதுபதியைப் பற்றிச் சொன்னாராம்.
ஆனா, 'கோ' படத்தில் ஜீவாவும், 'கவண்' படத்தில் விஜய் சேதுபதியும் அந்தந்த கேரக்டருக்கு வேற யாருமே நடிக்க முடியாதுங்கிற மாதிரி சிறப்பா நடிச்சாங்க. 'கீ' படத்தில் ஜீவா நடித்திருக்கும் ஷாட்களும் அப்படிச் சிறப்பா வந்திருக்கு" எனப் பாராட்டினார்.
என்னைப் பொறுத்தவரைக்கும் பிரமாண்டம்ங்கிறது பெரிய செட் போடுறது இல்ல. நல்ல போட்டோகிராஃபி, மியூசிக், சவுண்ட் எஃபெக்ட்ஸ், எடிட்டிங், VFX எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒரு மேஜிக் நடக்கும். அதுதான் பிரமாண்டம். அது இந்தப் படத்தில் இருக்கு" எனப் பேசினார்.


Click it and Unblock the Notifications











