அய்யோ.. கடவுளே.. மாரிமுத்து மரண செய்தி கேட்டு கதறிய நடிகர் சூரி!

சென்னை: ஆதி குணசேகரனாக அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்த மாரிமுத்து நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தி கேட்டு கதறி அழுத நடிகர் சூரி.

பேருந்து வசதி,பள்ளிக்கூட வசதியே இல்லாத ஒருகிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மாரிமுத்து, திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர்.

பல ஆண்டு போராட்டத்திற்கு பின் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

Director actor marimuthu dies actor soori condolence

மாரிமுத்து: மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த், ராஜ்கிரண் போன்ற பிரபலங்களின் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார் . அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது என அடுத்தடுத்து நடித்து வந்தார்.

உயிரிழந்தார்: எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான இவர், இன்று காலை 8.30 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தனது கம்பீரமான குரலாலும், அசாத்தியமான நடிப்பாலும் ரசிகர்களின் நீங்க இடம் பிடித்த மாரிமுத்துவின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சரத்குமார் அஞ்சலி: சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மாரிமுத்துவிற்கு அந்த சீரியலில் நடித்த நடிகர்கள் அவரின் உடலை சுற்றி கதறி அழுதபடி நிற்கின்றனர். நடிகர் சரத்குமார் மாரிமுத்துவின் உடலுக்குநேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் சூரி இரங்கல்: இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சூரி, பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மாரிமுத்து இயக்கிய புலிவால் படத்தில் நானும் விமலும் நடித்திருந்தோம். இதுவரை அவருடன் நான்கு படத்தில் நடித்திருக்கிறேன். மருது படத்திலும், கடைகுட்டிசிங்கம் படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டைபெற்றது.

அய்யோ.. கடவுளே: அடுத்து நான் நடித்து வரும் ஒரு படத்தில், ஒரு கதாபாத்திரத்திற்காக இவரிடம் பேசினார்கள் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை இந்த நிலைமையில் பார்க்கும் போது மனசு பதறுகிறது. அய்யோ.. கடவுளே... என நடிகர் சூரி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X