குழந்தை மனம் கொண்டவர் பிரதாப் போத்தன்..வீடியோவில் உருகிய சத்யராஜ்!

சென்னை : தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

நடிகர் பிரதாப் போத்தன் மறைவு நடிகர் சத்யராஜ் இரங்கல்

தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இயக்குநராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70.

அவரது உடல் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் 12 படங்களை இயக்கி உள்ளார். இதில் மீணடும் ஒரு காதல் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார். மேலும் பிலிம் பேர் விருதையும் வென்ற பிரதாப் போத்தன், பல விருது வழங்கும் நிகழ்ச்சியில் தேர்வுக்குழுவிலும் இடம் பெற்றிருந்தார். கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

தூக்கத்திலேயே உயிர்பிரிந்தது

தூக்கத்திலேயே உயிர்பிரிந்தது

நடிகர் பிரதாப் போத்தன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் வீட்டில் வேலை செய்பவர் அவரை எழுப்புவதற்காக படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் படுக்கையில் எந்தவிதமான அசைவும் இன்றி கிடந்துள்ளார். இதையடுத்து, மருத்துவர்களை வந்து அவரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சத்யராஜ் இரங்கல்

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய ஆயிருர் நண்பன், மிகச்சிறந்த இயக்குநர், அற்புதமான நடிகர் பிரதாப் பேத்தனின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் ஜீவா, மகுடம் என்ற இரண்டு படங்களில் நடித்தேன். இரண்டுபடமும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

குழந்தை மனம் கொண்டவர்

குழந்தை மனம் கொண்டவர்

அவருடன் இருந்தால் பொழுதுபோவதே தெரியாது, அவர் குழந்தை போல மனதை கொண்டவர். எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார், திடீரென அவரது இறப்பு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கலைத்துறையினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X