அஜித்தின் டார்லிங்! நடிப்பின் அரக்கன்! தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ்! கில்லர் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள்
சென்னை: தமிழ் சினிமாவை கூர்ந்து கவனித்துவருபவர்களிடம் எஸ்.ஜே. சூர்யா குறித்து கேட்டால், நடிப்பு அரக்கன் என இன்றைகுச் செல்லிவிடுவார்கள். ஆனால் இந்த நடிப்பு அரக்கன் என்ற உயரத்தினை எட்டுவதற்கு எஸ்.ஜே. சூர்யா தனது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி, படுதோல்வி, மீண்டு வரவே முடியாத தோல்வி என பல இன்னல்களைச் சந்தித்து அதில் இருந்து ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தினை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் உள்ளார்.
இன்றைக்கு எஸ்.ஜே.சூர்யா தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவர் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா பேசிய வசனங்களில், " வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு" என்ற வசனம் இன்றைக்கும் பலரது கவனத்தை ஈர்த்த வசனமாக உள்ளது. இந்த வசனத்தைப் போலத்தான் எஸ்.ஜே சூர்யாவின் திரையுலக வாழ்க்கையும், ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி அது சரிவைச் சந்திக்கின்றது என்றால், மற்றொரு புள்ளியில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி அதில் வெற்றி கண்டவர்.

சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஏற்பட்ட ஆசையால் தன்னை ஒரு ஸ்டாராகவே கருதி வந்தார் எஸ்.ஜே. சூர்யா. ஆனால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும்போது, நாம் இயக்குநர் ஆனால் மட்டும்தான் நமது கனவான நடிகர் என்ற கனவை அடைய முடியும் என புரிந்துகொண்டு, இயக்குநர் ஆவதற்கான வேலைகளில் ஈடுபடத்தொடங்கினார். ஆனால் நடிக்க வாய்ப்பு தேடி 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும்போதே வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டார். அதன் பின்னர் அவரை அவரது பெற்றோர்கள் தேடிப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து பள்ளிப்படிப்பை முடிக்க வைத்தனர்.
வாலி: அதன் பின்னர் லயோலா கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கும்போது சினிமா வாய்ப்பு தேடினார். முதலில் இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சூர்யா, ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்தபோது அஜித்திற்கு வாலி படத்தின் கதையைச் சொல்லி இயக்குநர் ஆனார்.

அஜித்தின் டார்லிங்: அந்த காலகட்டத்தில் அறுந்து போன ரப்பர் செருப்பில் பின்னூசி குத்தி அணிந்திருப்பாராம் சூர்யா. ஆனால் அப்படி இருக்கும்போதே அஜித்தின் சூர்யாவை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும்போது தனது தோளுடன் இறுக்கிப் பிடித்து எனது அடுத்தப் படத்தின் இயக்குநர் என அறிமுகம் செய்து வைப்பாராம். மேலும் எஸ்.ஜே. சூர்யாவை டார்லிங் என கூப்பிடுவாராம் அஜித். இதனை சூர்யாவே பல மேடைகளில் கூறியுள்ளார்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா: வாலி படத்திற்குப் பின்னர் விஜய்யை வைத்து குஷி படத்தினை இயக்கினார். அதன்பின் குஷி படத்தினை தெலுங்கிலும் எடுத்தார். அங்கும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் மட்டும் வெற்றிப் படமாக மாறவில்லை. அதன் பின்னர் தானே நடிகனாக களம் இறங்க முடிவு செய்து நியூ படத்தினை தானே இயக்கி நடிக்கவும் செய்தார். அந்த படம் ஓரளவுக்கு இவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வெற்றியைக் கொடுக்க, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

காணவில்லை: இவரது நடிப்பில் வியாபாரி படம் இன்றைக்கும் தாய்மார்களின் விருப்பப் படமாக உள்ளது. ஆனால் இவரது நடிப்பு குறித்து சிலர், எஸ்.ஜே. சூர்யா ஓவர் ஆக்டிங் செய்கின்றார் எனக் கூறினர். இசை என்ற படத்தினை தான் இயக்கியது மட்டும் இல்லாமல் தானே நடித்து தானே அந்த படத்திற்கு இசை அமைத்தார். இந்த படத்திற்கு இசை அமைக்கவேண்டும் என்பதற்காக முறைப்படி இசையைக் கற்றுக் கொண்டார். இந்த படத்திற்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யாவை பல ஆண்டுகள் காணவில்லை என்றே கூறலாம்.
கம்பேக்: இசை படத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால், அதில் ஒரு படத்தில் கூட எஸ்.ஜே. சூர்யாவின் பெயர் இல்லை. இப்படியான நிலையில்தான் இறைவி படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை மீண்டும் அழைத்து வந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட இவரது திரையுலக வாழ்க்கையுடன் பொருந்திப் போனதால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் பிச்சு உதறினார் என்றே கூறவேண்டும். குறிப்பாக அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிரட்டிவிட்டிருப்பார்.

மாஸ் வில்லன்: அதன் பின்னர் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் வெற்றி கொடுத்தார். ஆனால் இவரது நடிப்புக்கு வில்லன் கதாபாத்திரம் அப்படியே பொருந்திப் போவதால், இயக்குநர்கள் இவரது கால்ஷீட்டுக்காக இன்றைக்கு வரிசையில் நிற்கின்றனர். ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை, மெர்சல், மாநாடு உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்தியது எனலாம். இவர் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கின்றார் என்றால் அந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா டச் என்ற ஒன்றைக் கொடுத்து கதாபாத்திரத்தை ஆகச்சிறந்த கதாபாத்திரமாக மாற்றிவிடுகின்றார்.
எஸ்.ஜே. சூர்யா டச்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதாபாத்திரத்தில் சத்தியஜித் ரேவின் மாணவன் என பொய் சொல்லி நடித்திருக்கும் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என கூறும் அளவிற்கு நடித்துள்ளார். மேலும் மார்க் ஆண்டனி படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காகவே படத்தைப் பார்த்தவர்கள் ஏராளம். குறிப்பாக இவர் பேசும், "அவன் கெடக்குரான்டா மயிராண்டி.. அவனுக்கு என்னடா தெரியும் சில்க்-அ பத்தி" எனும் வசனம் இன்றைக்கும் இணையத்தில் உலா வருகின்றது.

ராயன்: இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தில் இவருக்கான போர்ஷன் மிகக் குறைவு என்றாலும், இந்தியன் 3 படத்தில் படம் முழுக்க வருகின்றார். இது மட்டும் இல்லாமல் இவர் வில்லனாக நடித்துள்ள ராயன் படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரைப் பார்த்த பலரும் இவரது கெட்டப் குறித்து பாராட்டி இருந்தனர்.
கில்லர்: நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தாலும் இவரது இயக்கத்தில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட கில்லர் படத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பலரது மனதிலும் உள்ளது. எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றது. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் ஃபீனிக்ஸ் பறவையாக உள்ள எஸ்.சூர்யா இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவருக்கு நமது ஃபிலிமீ பீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications











