நடிகர் விஷால் முதலில் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தட்டும்.. லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம் நன்மைக்குத்தான் என்று கூறியுள்ளார்.

கேரள திரையுலகம் இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேரளா திரையுலகின் மானமே போய்விட்டதாக கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், இதற்காக பெண்கள் வாய்மூடி சும்மா இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவில் ஒரு முடிவிற்கான துவக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

lakshmi ramakrishnan hema committee report vishal

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள ஹேமா கமிஷன் ரிப்போர்ட் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அடுத்தடுத்த சர்ச்சைகள், கண்டனங்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நடிகை ஒருவரின் புகாரையடுத்து மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீதும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் உள்ள நிலையில் இவர்களும் விரைவில் கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை: இந்நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த நடிகைகள் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கேரளாவில் நடந்துள்ள இந்த விஷயம் நல்லதுக்கு தான் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் உள்ளதாகவும் காவல்துறையிலும் இதுபோன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரளாவில் இது போன்ற பிரச்சனைகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழ் இண்டஸ்ட்ரியிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஷால் குறித்து காட்டம்: அதிகமான பண நடமாட்டம் உள்ள துறை என்பதால் சினிமா துறையில் அதிகாரம் செலுத்தும் நபர்களும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, நடிகர் விஷால் இந்த விஷயத்தில் குரல் கொடுத்துள்ளது குறித்து பேசியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், முதலில் அவர் நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது பெண்கள் நடிகர் சங்கத்தை அணுகுவதற்கு தயக்கமும் அச்சமும் காட்டுவதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா வெளிப்படையாக பேசுவாரா?: தற்காலத்தில் செக்ஸ் மற்றும் லிவிங் டுகெதர் உள்ளிட்டவற்றில் வெளிப்படையாக நடிகர், நடிகைகள் நடந்துக் கொள்வதாகவும் ஆனால் கடந்த தலைமுறை நடிகர்கள் தான் இது போன்ற விஷயங்களை மூடி மறைத்ததாகவும் லஷ்மி ராமகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டவர்களும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கவில்லை என்று வெளிப்படையாக பேசுவார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பாண்டிராஜ், ஏஎல் விஜய் உள்ளிட்ட இளம் தலைமுறை இயக்குநர்கள் பாலியல் துன்புறுத்தல் நடைபெறவில்லை என உறுதி அளிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிப்படையாக பேசும் இளம் நடிகர்கள்: இதேபோல நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, அருள்நிதி, கார்த்தி, சிவகார்த்திகேயன் என இளம் தலைமுறை நடிகர்கள் பாலியல் சுரண்டல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவார்கள். தான் ரிலேஷன்ஷிப் குறித்து பேசவில்லை என்றும் ஆனால் வாய்ப்பிற்காக பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதைத்தான் தான் கேள்விட்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X