AK 64 கதை இதுதான்.. ஓபனாகவே அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. தல தீபாவளிக்கு ரெடி ஆகலாம் போலயே!
மலேசியா: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றால் அது குட் பேட் அக்லி. இந்த படம் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் பட்டாசான கமர்ஷியல் படமாக வெளியானதால் ரசிகர்கள் தியேட்டரில் அஜித்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இது மட்டும் இல்லாமல் படத்தில் அஜித்திற்கு பல ஓபனிங் சீன்கள் இருந்ததால் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டது. இப்படி இருக்கும்போது அவரது அடுத்த படம் குறித்த கேள்விகள் பலருக்கும் இருந்தது.
குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இதனால் இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது அஜித் நடிப்பில் உருவாகவுள்ள படம் தான். இந்த படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து கோலிவுட்டில் உலா வந்து கொண்டே இருக்கிறது. அதாவது படத்தின் தயாரிப்பாளர் தான் சரியாக அமையவில்லை என்ற பேச்சு இருந்து கொண்டே இருந்தது. இதற்காக பாலிவுட் தயாரிப்பாளர்கள் வரை பலரையும் படக்குழு அணுகியதாகவும் கூறப்பட்டது.
இப்படி இருக்கும்போது, மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணியும் இந்தியாவின் தலைசிறந்த கார் ரேசர்களில் ஒருவரான நரைன் கார்த்திகேயனின் அணியும் இணைந்து களமிறங்கி உள்ளது. பந்தயத்தில் அவர்களின் கார்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டு உள்ளது.

அஜித் 64: இந்நிலையில் அவரிடத்தில் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த கேள்விகளை முன் வைத்தபோது, அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " அஜித் சாரின் அடுத்த படம் முந்தைய படமான குட் பேட் அக்லி படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இருந்து முற்றிலும் நேர் எதிரானது. அஜித் சாரின் கதாபாத்திரமும். படத்தின் திரைக்கதையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த அப்டேட் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
தீபாவளி ரிலீஸா?: குறிப்பாக, படத்தின் கதை குட் பேட் அக்லி படத்தில் இருந்து முற்றிலும் நேர் எதிரான கதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் படத்தின் மீதான ஆவலில் இந்த தகவலை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். மேலும் பலர் படத்தை தீபாவளிக்கு எதிர் பார்க்கலாமா என்றும் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











