Adhik Ravichandran: மார்க் ஆண்டனி படம் உருவாக அஜித் தான் காரணம்.. உணர்ச்சிவசப்பட்ட இயக்குநர்!
சென்னை: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தின் டீசர், ட்ரெயிலர் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில், படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை உற்சாகப்படுத்திய அஜித்: நடிகர் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வரும் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் தமிழ், தெலுங்கில் முன்னதாக வெளியான நிலையில், நேற்றைய தினம் இந்தியில் வெளியானது. இதுவரை இந்த ட்ரெயிலர் தமிழில் 23 மில்லியன் வியூஸ்களையும் தெலுங்கில் 10 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ள நிலையில் ஒரே நாளில் இந்தியில் 3 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை புரிந்துள்ளது.
விஷாலின் நடிப்பில் வெளியான படங்களில் ட்ரெயிலரில் அதிகமான வியூஸ்களை பெற்ற படமாக இந்தப் படத்தின் ட்ரெயிலர் அமைந்துள்ளது. படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இருவேறு வேடங்களில் மிரட்டியுள்ளனர். டைம் டிராவல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அனைவருக்கும் புரியும்படி எளிமையான திரைக்கதையில் ஆதிக் இயக்கியுள்ளதாக முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்திருந்த பேட்டியில் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார்.
1975 மற்றும் 90களில் இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ள விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் அப்பா -மகனாக நடித்துள்ளனர். இந்த காலகட்டங்களில் இருவரும் கேங்க்ஸ்டராக இருந்த நிலையில், டைம் ட்ராவல் மூலம் இவர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் டபுள் டெக்கர் பஸ் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளதாகவும் படம் அதிகமான சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களை கண்டிப்பாக என்டர்டெயின் செய்யும் என்றும் விஷால் தனது பேட்டியில் மேலும் கூறியிருந்தார்.
முன்னதாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பஹீரா போன்ற படங்களை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் படங்களில் அதிகமாக ஆபாச நெடி வீசுவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின்மூலம் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டு அவர் படத்தை கொடுத்துள்ளதாகவும் இந்தப்படம்தான் அவரது முதல் படமாக அமைந்துள்ளதாகவும் விஷால் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனை பெரிய அளவில் மாற்றியது அஜித்தின் வார்த்தைகள்தான் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். நடிகராகவும் உள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் நேர்கொண்ட பார்வையில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிக்கும்போது இரு படங்களை மட்டுமே தான் இயக்கியிருந்ததாகவும் தன்னை தான் சரியாக நிரூபிக்க முடியாத சூழலில், பெரிய அளவில் இலக்குகளை வைத்துக் கொண்டு முயற்சி செய்ய அஜித் தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவரால்தான் தான் பெரிய அளவில் மார்க் ஆண்டனி படத்திற்கான முயற்சியை மேற்கொண்டதாகவும் ஆதிக் கூறியுள்ளார்.
நெல்சன், அட்லி போன்றவர்களுக்கு உத்வேகமாக விஜய் அமைந்ததாகவும் அவரின் தூண்டுதலால்தான் அவர்கள் இருவரும் ரஜினி, ஷாருக்கான் என அடுத்த லெவலுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், நெல்சன், அட்லி போன்றவர்கள் தங்களை பெரிய இயக்குநர்களாக முன்னதாகவே நிரூபித்த நிலையில், அவர்களை விஜய் உற்சாகப்படுத்தினார். ஆனால் சரியாக தன்னை நிரூபிக்காத சூழலிலேயே தன்னை பெரிய அளவில் முயற்சி மேற்கொள்ள அஜித் உற்சாகப்படுத்தியதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











