Ajith: காமெடி படமாக உருவாகும் ஏகே63.. ஆதிக் ரவிச்சந்திரனின் வேற லெவல் பிளான்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மீண்டும் அசர்பைஜானில் நடந்து வருகிறது.
படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் வரையில் அசர்பைஜானில்தான் நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே43 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படத்திற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களுடன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் சிறப்பான வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படம் விடாமுயற்சி என்ற டைட்டில் அறிவிப்புடன் பல மாதங்கள் இருந்த நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஜித்தின் விடாமுயற்சி: ஆக்ஷன் என்டர்டெயினர் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. சமீபத்தில் சூட்டிங்கில் இருந்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் சிறிது கேப் எடுத்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர். அஜித், திரிஷா உள்ளிட்டவர்களின் விமானநிலைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
அசர்பைஜானில் மீண்டும் ஷூட்டிங்: இந்நிலையில் தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. முன்னதாக முதல் ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சிகள், அஜித் -திரிஷா பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அஜித், அர்ஜுன், திரிஷா நடித்துவரும் கார் சேஸிங் காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 15 நாட்கள் இந்தக் காட்சிகள் ஷூட் செய்யப்பட உள்ளதாகவும் அடுத்தடுத்து காட்சிகள் தொடர்ந்து சரியான வகையில் திட்டமிடப்பட்டு அசர்பைஜானில் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏகே63 படம்: இந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான மற்றும் மேலும் அழகான திரிஷாவை பார்க்க முடியும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய ஏகே43 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரனுடன் அவர் இணையவுள்ளார். இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை காமெடி படமாக எடுக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டு அதற்கான கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காமெடி களத்தில் அஜித்?: நடிகர் அஜித் ஆக்ஷன் ஜானர்களில் அதிகமாக நடித்து வரும்நிலையில் அவருக்கு காமெடி எப்படி செட் ஆகும் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வீரம் உள்ளிட்ட படங்களில் அஜித்தை சுற்றியுள்ளவர்கள் அதிகமாக காமெடி செய்வதாக காணப்பட்டது போல இந்தப் படமும் அமையுமா என்ற கேள்வியும் தற்போது உருவாகியுள்ளது. எது எப்படியோ மார்க் ஆண்டனி என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ள ஆதிக், அஜித்திற்கும் சிறப்பான கதைக்களத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











