Ajithkumar: தீனா பட லுக்கில் அஜித்குமார்.. குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஓவர்.. ரிலீஸ் தேதி இதுவா?
சென்னை: நடிகர் அஜித்துக்கு வரப்போகும் 2025ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது. அவரது நடிப்பில் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேநேரத்தில் தனது பிறந்த நாளுக்கு முன்னர், ஐரோப்பிய கார் பந்தயத்தில் தனது அணியை களமிறக்கவுள்ளார். மேலும் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி அடுத்த ஆண்டு அஜித்குமாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆண்டாக அமையவுள்ளது.
ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்துவிட்டதாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், புகைப்படமும் வீடியோவும் வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதில் அஜித் அவரது நடிப்பில் வெளியான தீனா படத்தில் இருப்பதைப்போல் காஸ்ட்யூம் அணிந்துள்ளார். இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வந்த படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க இருந்ததாகவும், அதன் பின்னர் ஜி.வி. பிரகாஷ்குமார் படத்திற்கு இசை அமைக்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருபேச்சு திரைத்துறை வட்டாரத்தில் ஓடிக்கொண்டு உள்ளது. குட் பேட் அக்லி படத்தினைப் பொறுத்தவரையில், படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலேயே, படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அறிவிப்புடனே வெளியானது.
இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம், 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு, குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகும், இரட்டிப்பு கொண்டாட்டம்தான் என்ற மனநிலையில் இருந்தனர். ஆனால், விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது எனத் தெரிந்தவுடன் ரசிகர்கள் வருத்தப்பட்டனர். இதுமட்டும் இல்லாமல், விடாமுயற்சி படத்தினைக் கண்டு கொள்ளாமல், பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆனால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

அப்டேட்: இதற்கு காரணம், குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர்களும், படம் குறித்த மாஸான அப்டேட்டுகளும்தான். ஆனால் கடந்த மாதம், கடைசி வாரத்தில், விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி, பொங்கலுக்கு ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்களே எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தாலும், படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விடாமுயற்சி படத்தினைக் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஷூட்டிங் ஓவர்: இப்படியான நிலையில், பொங்கலுக்கு வரவேண்டிய குட் பேட் அக்லி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. மேலும், படப்பிடிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வியும் எழுந்தது.

இப்படியான நிலையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்தில், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்து அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆதிக், பகிர்ந்துள்ள புகைப்படத்தில், அஜித், அவர் நடித்த தீனா படத்தில் இருந்ததைப்போல் காஸ்ட்யூம் அணிந்து செம மாஸாகவும், லவ்லியாகவும் உள்ளார்.
ரிலீஸ் தேதி: அதிக் தனது பதிவில், எனது வாழ்நாளில் எனக்கு இப்படியொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ சோ மச் சார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த ஒட்டுமொத்த பயணமும் இனிமையாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்தப் பதிவும், அவர் பகிர்ந்துள்ள புகைப்படமும், அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ரசிகர்கள் பலரும் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக திரைத்துறையில் ஒரு பேச்சு அடிபடுகின்றது.



Click it and Unblock the Notifications











