வொர்க் அவுட்டுடன் கண்ணடித்து உற்சாகமாக நாளை துவங்கிய ஐஸ்வர்யா ரஜினி.. இளமையின் ரகசியம்!

சென்னை : இயக்குநர் மற்றும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் என்ற சிறப்பான அடையாளத்துடன் உள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

தனுஷுடனான 18 ஆண்டுகால திருமண பந்தம் முறிந்தபோதிலும் தன்னுடைய பெற்றோர், குழந்தைகள் என்று தன்னை என்கேஜ் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

மேலும் தனிப்பட்ட முறையில் தன்னுடைய உடல்நலன், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றிலும் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி தன்னை சிறப்பான இயக்குநராக அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினி, இயக்குநர் என்ற அடையாளத்தோடு ரஜினிகாந்தின் மூத்த மகள் என்ற சிறப்பு அடையாளமும் அவரை சிறப்பாக வைத்துள்ளது. நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறிக்கும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா.

பிட்னசில் கவனம்

பிட்னசில் கவனம்

தொடர்ந்து தன்னுடைய பிட்னசில் அதிக கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா ரஜினி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது இதுகுறித்த வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளார். அவ்வப்போது சைக்கிளிங், வொர்க் அவுட்கள், ஜாக்கிங் என வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு


மேலும் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வருகிறார். இதன் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ஆன்மீக பயணங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

குடும்பத்தினருடன் அதிக நேரம்

குடும்பத்தினருடன் அதிக நேரம்

சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார் ஐஸ்வர்யா. இந்த நிகழ்வின்போது தன்னுடைய தந்தையிடம் குழந்தைகளுடன் இணைந்து ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தன்னுடைய தந்தை தூரமாக பயணங்களை மேற்கொள்ளும்போதும் உடனிருந்து அவரை கவனித்துக் கொள்கிறார்.

பிட்னசில் கவனம்

பிட்னசில் கவனம்


ஜிம்மிலும் விதவிதமான வொர்க் அவுட்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார். வளர்ந்த குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தபோதிலும் தன்னுடைய உடல்நலனை சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அடுத்தடுத்த வொர்க்அவுட் வீடியோக்கள்

அடுத்தடுத்த வொர்க்அவுட் வீடியோக்கள்

இன்றைய தினமும் வெயிட் மேனேஜ்மெண்டை அடிப்படையாக கொண்ட வொர்க் அவுட்டை செய்து அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மிகவும் வெறித்தனமாக தனது வொர்க் அவுட்களை மேற்கொள்ளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இன்றைய வொர்க்அவுட்டின்போது தன்னுடைய வொர்க்அவுட்டின் இடையில் ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கண்ணடித்தது அவர்களை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X