சக்சஸ் படம் கொடுத்த தயாரிப்பாளருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார் மகள்.. விசயம் பெருசு டோய்!

சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது உழைப்பாலும் தனித்துவமான கதை சொல்லும் முறையாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் ஊடக வெளிச்சத்திலும் இவரது பெயர்தான் அதிகம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம், ஒரு இயக்குநராக அவரது முதிர்ச்சியையும் சமூகப் பொறுப்பையும் வெளிப்படுத்திய விதமே அதற்கு முக்கியக் காரணம்.

வெறும் பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தராமல், சமூகத்தில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் மனித நேயத்தைப் பேசும் கதையை அவர் கையில் எடுத்த விதம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக, தனது தந்தை ரஜினிகாந்தையே ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, அவரிடமிருந்து ஒரு செறிவான நடிப்பை வாங்கியிருந்தது ஐஸ்வர்யாவின் மேக்கிங் ஸ்டைலுக்குச் சான்றாக அமைந்தது.

திரைத்துறை தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அவர் எதிர்கொள்ளும் விதம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. உடற்பயிற்சி, யோகா மற்றும் சைக்கிளிங் எனத் தனது உடல் நலனில் அவர் காட்டும் அக்கறை, 'வாழ்க்கை எதைக் கொடுத்தாலும் முன்னேறிச் செல்ல வேண்டும்' என்ற அவரது பாசிட்டிவ் அணுகுமுறையைப் பறைசாற்றுகிறது.

Director Aishwarya Rajinikanth Joins HANDS With Producer Kannan Ravi For Pan India Project

அடுத்த படம்: தற்போது அடுத்தடுத்த படங்களுக்கான கதை விவாதங்களில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா, ஒரு பெண்ணாகத் திரையுலகில் இயக்குநராக நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இவரது அடுத்த படைப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் பிரபல தயாரிப்பாளரான கண்ணன் ரவி உடன் கை கோர்த்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தின் தயாரிப்பாளராக கண்ணன் ரவி செயல்படவுள்ளார்.

பான் இந்தியா: இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா அளவுக்கு படத்தை பிரமாண்டமாக கொண்டு செல்ல படக்குழு முடிவெடுத்துள்ளதை அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் தயாரிப்பு நிறுவனமான கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிக்கும் 9ஆவது படம் இது என்றும் அவர்களது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் நடிகர்கள், நடிகைகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து எந்த தகவலும் தற்போதைய அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X