Aiswarya Rajini: கருத்துப் போன ஐஸ்வர்யா ரஜினி.. லால் சலாம் சூட்டிங்கில் பிசி!

சென்னை: இயக்குநரும் நடிகர் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் முக்கியமான கேரக்டர் ரோலில் நடித்து வரும் நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் பட்த்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Director Aishwarya rajinikanth shared new Shooting spot photo of Lal Salaam movie

லால் சலாம் சூட்டிங் போட்டோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி: இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை போன்ற படங்களை முன்னதாக இயக்கியிருந்தார். நடிகர் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு இவர் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் உருவாகிவரும் மூன்றாவது படமான லால் சலாம், கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் சூட்டிங் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடித்து வருகிறார். விளையாட்டை மையமாக வைத்து வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், லால் சலாம் படமும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை இரண்டு படங்களும் சிறப்பான திரைக்கதையை கொண்டிருந்ததாக பாராட்டப்பட்டன. அந்த வகையில் லால் சலாம் படமும் ரசிகர்களை கவரும் அம்சங்களுடன் உருவாகி வருவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவரது முந்தைய படங்களில் இல்லாத வகையில், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிப்பதும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது.

Director Aishwarya rajinikanth shared new Shooting spot photo of Lal Salaam movie

இந்தப் படத்திற்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. தற்போது ரஜினியின் போர்ஷன்களை படமாக்கி வரும் அவர், முன்னதாக சரியான திட்டமிடலுடன் அவர் இல்லாத நேரத்தில், மற்றவர்களின் போர்ஷன்களையும் சிறப்பாக படமாக்கியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்பு ரஜினியுடன் லால் சலாம் சூட்டிங் புகைப்படத்தை வெளியிட்ட அவர், தான் தன்னுடைய தந்தையை இயக்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

Director Aishwarya rajinikanth shared new Shooting spot photo of Lal Salaam movie

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டுள்ளார். அதில் நமக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிகமான வியர்வையுடன் அவர் கருத்து காணப்படுகிறார். கருப்பு கண்ணாடியுடன் அவர் இந்தப் புகைப்படத்தில் இருந்தாலும் வழக்கமான அவரது க்ளோ இந்தப் புகைப்படத்தில் மிஸ்ஸிங். மழை, வெயில் பார்க்காமல் அவர் லால் சலாம் படத்திற்காக உழைத்து வருவது இந்தப் புகைப்படத்தில் அப்பட்டமாக தெரியவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X