lal salaam: போட்ரா வெடிய.. ரஜினி நடிக்கும் லால் சலாம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது

Director aishwarya Rajinikanths lal salaam movie release plan to december

ஜெயிலர் படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

தலைவர் 170: ஜெயிலர் படத்தின் கொல மாஸ் வெற்றியால், ரஜினி ரசிகர்கள் குஷியில் இருப்பதால், ரஜினி படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிட்டு, சோஷியல் மீடியாவில் ஹைப்பை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், ரஜினிகாந்த் அடுத்ததாக தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குநர் டி.ஜி ஞானவேல் இயக்க உள்ளார்.

படத்தின் பூஜை: தலைவர்170 திரைப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி நிலையில், ஆகஸ்ட் 26ந் தேதி வெள்ளிக்கிழமை இப்படத்திற்கான பூஜை போடப்பட உள்ளதாக லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் ரிலீஸ்: இப்படி தலைவர் 170 படம் குறித்து அப்டேட்டுகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை ஏட்டி உள்ளதால், லால் சலாம் படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மொய்தீன் பாய்: லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை புயல் ஏஆர ரஹ்மான் இசையமைத்து உள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X