Don't Miss!
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- News
கிருஷ்ணகிரி மக்களின் நீண்டகால கனவு - நிறைவேற்றிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
சூப்பர்ஸ்டாருடன் பொங்கலை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினி.. க்யூட் புகைப்படங்கள் இதோ!
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால வாழ்க்கையில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த பிரிவை அடுத்து தன்னுடைய வாழ்க்கையில் உடல்நலன், ஆன்மீகம், குழந்தைகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்கள், தன்னுடைய பயணங்களை பகிர்ந்து வருகிறார்.
சரியா ஒரு வருஷம் ஆச்சு... கவலைகளை இப்படித்தான் மறக்கிறேன்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் விமர்சனரீதியாக வெற்றி பெற்றன. பின்னணி பாடகியாகவும், நடன நிகழ்ச்சியின் நடுவர் போன்றவற்றிலும் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா.

லால் சலாம் படம்
இந்நிலையில் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பரில் நடைபெற்றது. படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கேரியரில் கவனம்
முன்னதாக நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அறிவித்த ஐஸ்வர்யா ரஜினி, தன்னுடைய கேரியர், உடல்நலன், குழந்தைகள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை அதிகமாக பார்க்க முடிகிறது.

சமூக வலைதளங்களில் பிசி
தொடர்ந்து பிட்னஸ் வீடியோக்கள், ஆன்மீக சுற்றுப் பயணங்கள், குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம், தன்னுடைய தந்தையுடனான பயணங்கள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

ரஜினியுடன் பொங்கல் கொண்டாட்டம்
இந்நிலையில் தன்னுடைய தந்தை ரஜினிகாந்த், தாய் லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் தான் கொண்டாடிய பொங்கல் பண்டிகையின் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் புகைப்படங்களில் அழகான காஸ்ட்யூமில் பொங்கல் வைத்த புகைப்படங்கள் காணப்படுகின்றன.

ரஜினியிடம் ஆசிர்வாதம்
தொடர்ந்து, மாடுகளுக்கு உணவளிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய குழந்தைகளுடன் இணைந்து ரஜினி -லதா ரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பொங்கல் அனைவருக்கும் சிறப்பாக அமைந்திருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.