சண்டே போல என்ஜாய்மெண்டை கொடுக்கும் மழை.. ஐஸ்வர்யா ரஜினி வேற லெவல் குதூகலம்!

சென்னை : இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த வாழ்க்கையை மிகவும் ரசனைக்குரியதாக மாற்றிக் கொண்டுள்ளார்.

தனக்கு மிகவும் பிடித்தமான வொர்க் அவுட், தன்னுடைய மகன்கள் என வாழ்க்கையை மிகவும் அழகானதாக ஆக்கியுள்ளார்.

நடிகர் தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு இவரது வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. மனதிற்கு நெருக்கமான பல செயல்களை செய்து வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இதுவரை 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் சிறந்த திரைக்கதைக்காக சிறப்பான வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தொடர்ந்து படங்களை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய குடும்பத்தில் அதிக கவனத்தை வழக்கம்போல செலுத்தத் துவங்கினார்.

திருமண முறிவு அறிவிப்பு

திருமண முறிவு அறிவிப்பு

இதனிடையே தனுஷுடனான 18 ஆண்டுகால வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அறிவிப்பை கடந்த ஜனவரியில் இவர் வெளியிட்டார். இந்த முடிவு ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்களது முடிவில் இருவரும் உறுதியாக இருந்தனர்.

உடல்நலனில் அக்கறை

உடல்நலனில் அக்கறை

இதனிடையே தனுஷ் தன்னுடைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யாவும் பாலிவுட்டில் தனது படத்தின் அறிவிப்பை மேற்கொண்டார். முன்னதாக முஸாபிர் என்ற இசை ஆல்பத்தையும் வெளியிட்டார். இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் மற்றும் மனநலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 அதிகமான வொர்க்அவுட்

அதிகமான வொர்க்அவுட்

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வொர்க்அவுட், சைக்கிளிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. மேலும் தன்னுடைய மகன்களுடன் தான் சிறப்பாக பொழுதுகளை போக்கும் வீடியோக்களையும், பண்டிகைகள், கோயில் விசிட்களின் புகைப்படங்களையும் இவர் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார்.

மழையை என்ஜாய் செய்து பதிவு

மழையை என்ஜாய் செய்து பதிவு

இந்நிலையில் தற்போது தான் என்ஜாய் செய்யும் மழையையும் இவர் பதிவு செய்துள்ளார். வார நாட்களில் பெய்யும் மழை, வாரயிறுதி நாட்களை போன்ற குதூகலத்தை கொடுப்பதாக இவர் தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான காலகட்டத்தில் மழையை நின்று ரசிக்கவும் ஒரு மனநிலை வேண்டும். அதை பிரதிபலித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

படம் எப்போது துவங்கும்?

படம் எப்போது துவங்கும்?

தனுஷுடன் பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஐஸ்வர்யா, அதே வேகத்தில் இசை ஆல்பத்தை வெளியிட்டு, உடனடியாக பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் இந்தப் படம் அறிவிப்புடன் நின்றுள்ளது. படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X