கண்ணாடிதான் நம்மோட வலிமையை பிரதிபலிக்கும்.. மீண்டும் வொர்க்-அவுட் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநராக இரண்டு படங்களை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. இவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சமீப காலங்களில் சிறப்பா கவனத்தை பெற்றுள்ளன.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையின் ரொட்டீன்களை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.

இதன்மூலம் தன்னுடைய உடல்நலத்தில் வெறித்தனமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். பாலிவுட்டிலும் விரைவில் படமியக்கவுள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி என்ற அடையாளங்களுக்கு பின் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா ரஜினி. இதுமட்டுமே தன்னுடைய அடையாளமாகாது என்பதை புரிந்து 3 என்ற படத்தை இயக்கினார். தன்னுடைய கணவர் தனுஷையே நாயகனாக வைத்து இந்தப் படத்தை கொடுத்தார்.

நல்ல பெயரை பெற்றுத்தந்த படம்

நல்ல பெயரை பெற்றுத்தந்த படம்

இந்தப் படம் வசூல்ரீதியாக சிறப்பான வெற்றியை பெறவில்லை என்றபோதிலும், படத்தின் பாடல்கள் வேற லெவலில் ரீச்சானது. தொடர்ந்து படத்தின் திரைக்கதையும் சிறப்பான விமர்சனங்களை பெற்று முதல் படமா இருந்தபோதிலும் ஐஸ்வர்யாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து இயக்காத ஐஸ்வர்யா

தொடர்ந்து இயக்காத ஐஸ்வர்யா

இதனிடையே அடுத்ததாக வை ராஜா வை என்ற படத்தை கௌதம் கார்த்திக் நடிப்பில் கொடுத்திருந்தார். இந்தப் படமும் நல்ல ரீச்சை பெற்றது. இந்நிலையில், தன்னுடைய குடும்பம், குழந்தைகள்மீது அக்கறை செலுத்துவதில் அதிக கவனம் செலுத்திய ஐஸ்வர்யா ரஜினி தொடர்ந்து படங்களை இயக்கவில்லை.

தனுஷுடனான பிரிவு

தனுஷுடனான பிரிவு

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷுடனான தன்னுடைய பிரிவை அறவித்தார் ஐஸ்வர்யா. இந்த அறிவிப்பு இவரது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து பல விஷயங்களில் மாற்றத்தை கொண்டு வந்தார். இசை ஆல்பத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.

 பாலிவுட்டில் புதிய படம் அறிவிப்பு

பாலிவுட்டில் புதிய படம் அறிவிப்பு

தொடாந்து பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தொடர்ந்து படத்தின் அறிவிப்புடன் சரி. மற்ற எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னுடைய உடல்நலனில் செலுத்தும் அதிகமான கவனத்தை மட்டும் எந்த நிலையிலும் விட்டுவிடாமல் உள்ளார் ஐஸ்வர்யா.

வொர்க் அவுட் வீடியோக்கள்

வொர்க் அவுட் வீடியோக்கள்

தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது மீண்டும் தனது வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கேப்ஷனாக, கண்ணாடி மட்டுமே நம்முடைய உள் மற்றும் வெளிப்புற வலிமையை சரியாக காட்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X