இன்னும் சில தினங்களில் துவங்கும் லால் சலாம் படத்தின் சூட்டிங்.. கெட்டப்பை மாற்றும் ரஜினி!

சென்னை : இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி இயக்கவுள்ள படம் லால் சலாம்.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினி

டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினி

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகவுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ கேரக்டரில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்தப் படத்தில் முஸ்லிமாக அவர் நடிக்கவுள்ள நிலையில், அதற்காக தாடி வளர்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகை ஜீவிதா இணையும் லால் சலாம்

நடிகை ஜீவிதா இணையும் லால் சலாம்

கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல தெலுங்குப்பட ஹீரோ ராஜசேகரின் மனைவி ஜீவிதா நீண்ட காலங்களுக்க பிறகு இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி

30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி

கடந்த 1990ம் ஆண்டிலிருந்து நடிப்பதிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டிருந்த ஜீவிதா, தற்போது லால் சலாம் படத்தின்மூலம் மீண்டும் திரைத்துறையில் தன்னுடைய ரீ என்ட்ரியை கொடுக்கவுள்ளார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவர் ரஜினிக்கு தங்கையாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7ம் தேதி சென்னையில் சூட்டிங்

7ம் தேதி சென்னையில் சூட்டிங்

மேலும் லால் சலாம் படத்தின் சூட்டிங் வரும் 7ம் தேதி முதல் சென்னையில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தப்படம் ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெட்டப்பை மாற்றும் ரஜினி

கெட்டப்பை மாற்றும் ரஜினி

இதனிடையே நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்காக தயாராகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ஏறக்குறைய வெற்றிப் பெற்றுள்ள நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X