வெள்ளிக்கிழமையும் அதுவுமா பழமையான அம்மன் கோயிலில் சூட்டிங்.. மெய்சிலிர்த்த ஐஸ்வர்யா ரஜினி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு முன்பு துவங்கியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக அவருடைய கெட்டப்பை மாற்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகர் தனுஷுடன் 18 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கும்வரையில், தன்னுடைய குடும்பம், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஐஸ்வர்யா ரஜினி தொடர்ந்து படங்களை இயக்காமல் இருந்தார்.

லால் சலாம் பட சூட்டிங்
இந்நிலையில் தற்போது லால் சலாம் என்ற படத்தை அறிவித்து அதை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் எளிமையான பூஜையுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முஸ்லிம் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தாடியை வளர்க்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட படம்
தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கில் உள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை முடித்துவிட்டு லால் சலாம் படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பழமையான கோயிலில் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோயிலில் இன்றைய தினம் சூட்டிங் நடைபெற்று வருவதாகவும் வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயிலில் சூட்டிங் நடப்பது தற்செயலாகவும் இருக்கலாம். அல்லது நான் விரும்பும் கடவுள் அதன் பிள்ளையுடன் மறைமுகமாக பேசும் இனிமையான தருணமாகவும் இருக்கலாம் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

ரஜினி கேரக்டருக்கு எதிர்பார்ப்பு
முன்னதாக ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான வை ராஜா வை படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். சிறிது நேரமே வந்தாலும் இந்தக் கேரக்டர் மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைந்தது. இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதால் இந்தக் கேரக்டருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. மேலும் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதும் மற்றொரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை ஐஸ்வர்யா இயக்கியுள்ள நிலையில், இந்த இரு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது. அப்பொழுது அதிகமான கமிட்மெண்ட்டுடன் இந்தப் படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். தற்போது சுதந்திரமாக லால் சலாம் படத்தை அவர் இயக்கிவரும் நிலையில், இந்தப் படம் எத்தகைய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











