பிரபு தேவாவுடன் இணைந்து எக்சர்சைஸ் செய்த ஐஸ்வர்யா ரஜினி.. ரப்பர் மேன் என புகழ்ச்சி!
சென்னை : நடிகர் ரஜினியின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினி, உடல்நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
நடிகர் தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனம் செலுத்தி, பல பிட்னஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய குழந்தைகள், உடல்நலன், ஆன்மீகம் மற்றும் புதிய படத்தின் இயக்கம் என தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி. இவர் தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3 மற்றும் கௌதம் கார்த்திக் லீட் கேரக்டரில் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே, தனுஷுடனான 18 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த ஆண்டில் இவர் வெளியிட்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய உடல்நலன், ஆன்ம நலன் போன்றவற்றில் சிறப்பாக செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தன்னுடைய பிட்னஸ் வீடியோக்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறார்.

குழந்தைகளுடன் அதிக நேரம்
மேலும் தன்மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்து, ஆன்மீக வழியிலும் தன்னுடைய மனதை செலுத்தி, தன்னுடைய வாழ்க்கையை செம்மைப் படுத்தி வருகிறார். தன்னுடைய குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரங்களை இவர் செலவிடுவதும் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.

படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினி
தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்னசில் அதிக கவனம்
லால் சலாம் படத்தின் இயக்கம் ஒருபக்கம் நடந்து வந்தாலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினி, தொடர்ந்து வீடியோக்களை, குறிப்பாக பிட்னஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து சில எக்சர்சைஸ் செய்யும் வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் பிரபுதேவாவை ரப்பர் மேன் என்றும் அண்ணா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் கூடுதல் நேரம்
தொடர்ந்து வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதிகமான வெயிட் லிப்டிங்கையும் செய்து வருகிறார். தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தினருடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











