Aiswarya Rajini: அப்பா எப்படியோ மகளும் அப்படியே.. ஐஸ்வர்யா ரஜினி சொன்ன விஷயம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அடுத்ததாக ஆகஸ்ட்டில் இவரது ஜெயிலர் படம் ரிலீசாக உள்ளது.
அடுத்ததாக தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் இவர் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து வருகிறார். இவரது காட்சிகள் மும்பை, புதுச்சேரியில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலையிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அப்பாவிற்கும் தனக்குமான ஒற்றுமையை குறிப்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆகஸ்ட்டில் இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் பாடல் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் கதை ஒரே நாளில் நடைபெறுவதாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது திருவண்ணாமலையில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்த சூட்டிங்கின்போது தன்னை பார்க்க வந்த ரசிகர்களை காரின் மேற்கூரை வழியாக நின்றபடியே ரஜினிகாந்த் கையசைத்து உற்சாகப்படுத்திய வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்தப் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அவ்வப்போது படத்தின் சூட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார். தொடர்ந்து தன்னுடைய தந்தையுடன் சூட்டிங்கின்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.
தன்னுடைய அப்பா ரஜினிகாந்தை தான் இயக்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை என்று முன்னதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார். தன்னுடைய கனவு நனவான தருணத்தையும் அவர் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தின்மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் படத்தின் சூட்டிங்கின்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா.
அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் ஒரேமாதிரி கைகளை கட்டியபடி காணப்படுகின்றனர். இந்தப் புகைப்படத்தில் தங்களது ஒற்றுமையை வெளிப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா, தந்தையை போலவே மகளும் என்று இந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார். மேலும் #Bestfatherever என்ற ஹேஷ்டேக்கையும் லவ் எமோஜியையும் அவர் தன்னுடைய கேப்ஷனில் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











