Aiswarya rajini: ஜூன் மாதத்தின் அழகான தருணங்கள்..ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட பதிவு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினி தனுஷுடனான பிரிவிற்குப் பிறகு வீடியோ ஆல்பம் மற்றும் லால் சலாம் படம் என அடுத்தடுத்து இயக்கி முடித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இவர் இயக்கத்தில் லால்ல் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். படம் வசூலிலும் சொதப்பிய நிலையில் தற்போது தன்னுடைய மகன்கள், அப்பா, பிட்னஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் என ஐஸ்வர்யா ரஜினி மீண்டும் பிஸியாகி உள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா: ரஜினி: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு தன்னுடைய மகன்கள், அப்பா, இயக்கம், பிட்னஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினி, தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தின் பல இனிமையான தருணங்கள், தன்னுடைய மகன்களுடன் தான் கழிக்கும் பொழுதுகள், தன்னுடைய அப்பா ரஜினியுடன் தான் செலவழிக்கும் நேரங்கள் ஆகியவற்றை அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்.
லால் சலாம் படம்: கடந்த பிப்ரவரியில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் ப்ரோமோஷன்களுடன் வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது,. வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகள், அப்பா ரஜினிகாந்த், வொர்க் அவுட் மற்றும் instagram என பிஸியாகி உள்ளார் ஐஸ்வர்யா.
ஜூன் மாதத்தின் அழகான தருணங்கள்: இந்நிலையில் தற்போது ஜூன் மாதத்தின் அழகான தருணங்களை இணைத்து அவர் அடுத்தடுத்த புகைப்படங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் அவரது காலைப் பொழுதுகள், சைக்கிளிங் பயிற்சி, மகனுடனான மகிழ்ச்சி தருணம், பிட்னஸ் பயிற்சிகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. தனுஷ் உடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி வீடியோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து லால் சலாம் படத்தையும் இயக்கினார் இந்நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் அவர் மீண்டும் தன்னுடைய இயக்கத்தை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்: விரைவில் அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். தனுஷ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த 3 படம் மூலம் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. தொடர்ந்து வை ராஜா வை படம் மூலமும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய குடும்பம், குழந்தைகள் என பிசியானார். இதையடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய இயக்கத்தை துவங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











