அம்மான்னா சும்மா இல்லடா.. விநாயகர் சதுர்த்தியில் மீண்டும் நிரூபித்த ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி தன்னுடைய சினிமா கேரியரில் 2 படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் திரைக்கதைக்காக பாராட்டுக்களை பெற்றன.

இந்நிலையில் நடிகர் தனுஷுடன் தன்னுடைய 18 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இதையடுத்து இவரது வாழ்க்கையில் பல ரொட்டீன்கள் மாறியுள்ளன. தன்னுடைய உடல்நலன், மனநலனில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனுஷுடனான தன்னுடைய பிரிவு அறிவிப்பிற்கு பிறகு இவர் தன்னுடைய உடல்நலனில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். மனநலனிலும்தான். இதற்கு அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது ஆன்மீகம்.

உலகமான மகன்கள்

உலகமான மகன்கள்

இது மட்டுமில்லாமல் இவரது உலகமாக மாறியுள்ளனர் இவரது மகன்கள். யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிகமான நேரத்தை செலவழித்து வருகிறார். தனுஷுடன் இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியபோது, அவர்களை கட்டித் தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்


இந்நிலையில் நேற்றைய தினம் இவர் தன்னுடைய வீட்டில் விநாயர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி தன்னுடைய கொண்டாட்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் தன்னுடைய மகன்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கான பலகாரங்களை ஊட்டி மகிழ்கிறார்.

 இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் சிறப்பான பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அவரது இந்தப் பதிவுகள் பெரும்பாலும் உடல்நலன் சார்ந்ததாகவே அமைகிறது. வொர்க் அவுட் வீடியோக்கள், சைக்கிளிங் போன்ற வீடியோக்கள் இவரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மகன்களுடன் அதிக நேரம்

மகன்களுடன் அதிக நேரம்

மேலும் ஆன்மீகமும் இவரது மன நிம்மதிக்காக உதவி வருகிறது. ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்த புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். தன்னுடைய மகன்களுடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வரும் ஐஸ்வர்யா, அதன் புகைப்படங்களையும் அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X