ஆண் நண்பரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி.. பிறந்தநாள் வாழ்த்தும் பகிர்வு!

சென்னை : இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

தனுஷுடனான பிரிவு அறிவிப்புக்கு பிறது இவரது உலகம் மாறியுள்ளது. தன்னுடைய மகன்கள் மற்றும் வொர்க் அவுட் என தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

விரைவில் பாலிவுட்டில் படமியக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழில் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலிவுட்டில் படம் அறிவித்துள்ளார்.

டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினி

டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, நடிகர் தனுஷுடனான தனது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த ஜனவரியில் அறிவித்து ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

கானல் நீரான முயற்சி

கானல் நீரான முயற்சி

இவர்களை சேர்த்து வைக்கும் இவர்களது குடும்பத்தினரின் முயற்சிகள் அனைத்தும் கானல் நீராக மாறின. இதையடுத்து இவர்கள் இருவரும் தங்களது கேரியரில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றனர். தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

முபாஷிர் இசை ஆல்பம்

முபாஷிர் இசை ஆல்பம்

இதனிடையே இந்த பிரிவுக்கு பிறகு முபாஷிர் என்ற இசை ஆல்பத்தை 4 மொழிகளில் வெளிடயிட்ட ஐஸ்வர்யா ரஜினி, தொடர்ந்து பாலிவுட்டில் புதிய படத்தையும் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக தமிழில் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.

பிட்னசில் அக்கறை

பிட்னசில் அக்கறை

இந்த விவாகரத்து முடிவு இவருக்குள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வரும் ஐஸ்வர்யா, தன்னுடைய வொர்க் அவுட்டையும் அதிகப்படுத்தியுள்ளார். தன்னுடைய பிட்னசிலும் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். ஜிம்மில் வொர்க் அவுட், சைக்கிளிங் என்று அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்.

ஆண் நண்பர் புகைப்படம்

ஆண் நண்பர் புகைப்படம்

இந்நிலையில் வொர்க் அவுட் செய்வதில் மற்றும் பிட்னசில் தனக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தவர் என்று தன்னுடைய ஆண் நண்பரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருடன் இன்று காலை சைக்கிளிங் சென்ற ஐஸ்வர்யா, இன்று பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

47 வயதான அவர் இன்று தன்னுடைய 50 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்மூலம் தானும் வயது ஏற ஏற தன்னுடைய பயணத்தின் தூரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவையடுத்து அவரது ஆண் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X