twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைமாமணிக்கு பிறந்தநாள்.. லவ் யூ அங்கிள்.. வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி!

    |

    சென்னை : இளையராஜா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    அவர் 80வது வயதை தொட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்நிலையில் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினி இளையராஜாவிற்கு தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     அச்சு அசலாக ரஜினியின் சாயலில் கெத்தாக ஸ்டைலாக யாத்ரா - ஐஸ்வர்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் அச்சு அசலாக ரஜினியின் சாயலில் கெத்தாக ஸ்டைலாக யாத்ரா - ஐஸ்வர்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி இளையராஜா

    இசைஞானி என்று அனைவராலும் புகழப்படுபவர் இளையராஜா. 50 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

    முதல்படம் அன்னக்கிளி

    முதல்படம் அன்னக்கிளி

    1976ல் அன்னக்கிளி என்ற கருப்பு வெள்ளை படம் மூலம் இவருது இசைப்பயணம் துவங்கியது. ஆனால் அதன்பிறகு இவரது வாழ்க்கையில் எல்லாமே வண்ணமயம்தான். தற்போது 80 வயதை தொட்டுள்ள இசைஞானிக்கு இரு தினங்களுக்கு முன்பு சதாபிஷேகமும் நடைபெற்றது. இதில் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பத்மபூஷன் பெற்ற இளையராஜா

    பத்மபூஷன் பெற்ற இளையராஜா

    இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன், தேசிய விருதுகள், நந்தி விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என இவர் வாங்கியுள்ள விருதுகளை வைக்கவே இவர் தனியாக வீடு கட்ட வேண்டும். பஞ்சமுகி என்ற ராகத்தை இவர் தனது சொந்த முயற்சியால் உருவாக்கியுள்ளார்.

     சிறு வயதிலேயே இசைக்கச்சேரிகள்

    சிறு வயதிலேயே இசைக்கச்சேரிகள்

    கடந்த 1943ல் பிறந்த இவர், சிறு வயதிலேயே வாத்தியங்கள் இசைப்பதில் வல்லவராக இருந்தார். தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்களை இசைக்க கற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து பல இடங்களில் இசைக் கச்சேரி செய்துள்ளார்.

     அன்னக்கிளியில் சிறப்பான பாடல்கள்

    அன்னக்கிளியில் சிறப்பான பாடல்கள்

    தொடர்ந்து சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். பஞ்சு அருணாச்சலத்தின் அன்னக்கிளி படம் மூலம் அவர் தன்னை இசையமைப்பாளராக அனைவருக்கும் பரிட்சயப்படுத்தினார். தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள், எவர்கிரீன் ரகத்தை சேர்ந்தவை. துள்ளலிசை பாடல்களானாலும் மெலடியானாலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று கூறலாம்.

    புத்தகங்களை எழுதிய இளையராஜா

    புத்தகங்களை எழுதிய இளையராஜா

    ஆன்மீகத்திலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட இளையராஜா பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது பல பாடல்கள் ரசிகர்களுக்கு போதையை தரக்கூடியது. இதையடுத்து சமீபத்திய பேட்டியொன்றில் இயக்குநர் ரா பார்த்திபன், இவரை போதைத் தடுப்பு பிரிவின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

    வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி

    இந்நிலையில் தற்போது இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, இவரது பிறந்தநாளையொட்டி அவர் தன்முன் இசையமைத்த பழைய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரைப் பார்த்துதான் தான் வளர்ந்ததாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

     புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    மேலும் அவரது வீட்டிலும் ஸ்டூடியோவிலும் தான் நாட்கள் தன்னுடைய பொழுதுகளை கழித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு அருகில் தான் இருக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இளையராஜா இசையமைப்பது போல காணப்படுகிறது.

    English summary
    Isainyani Ilayaraja celebrates his birthday today and Aiswarya rajini shared a video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X