Aiswarya Rajini: என்னோட இதயம் நடுங்குகிறது.. புதுச்சேரி சம்பவம் குறித்து பதைபதைத்த ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை: புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இந்த சம்பவம் கண்டனக் குரல்களை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சாவிற்கு நீதி கேட்டு, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் இன்னமும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருவதுகுறித்து திரைத்துறை பிரபலங்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினியும் சர்வதேச பெண்கள் தினத்தில் இதுகுறித்த தன்னுடைய ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த செயலை செய்தவர்கள் மனித உருவில் இருக்கும் பிசாசுகள் என்றும் அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தினத்தில் இருபோன்ற மற்றொரு சம்பவம் நடக்கக் கூடாது என்று இறைவனிடம் ஒவ்வொரு பெண்ணும் வலிமையான பிரார்த்தனையை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Director Aiswarya rajinikanth condemns Puducherry incident in International women s Day

சிறுமி கொலை சம்பவம்: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை கொலை செய்து கால்வாயில் சம்பந்தப்பட்டவர்கள் வீசியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முன்னதாக சிறுமியின் கொலைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஏராளமானோர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு அதிகபட்சமான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திரைத்துறையினர் கண்டனம்: அந்த வகையில் திரைத்துறையினரும் தங்களது கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியை கடத்தி சென்று இந்த பாதக செயலில் அந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். சிறுமியுடன் சேர்த்து அவரது பாட புத்தகங்கள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்டவையும் இறுதி ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

Director Aiswarya rajinikanth condemns Puducherry incident in International women s Day

ஐஸ்வர்யா ரஜினி கண்டனப்பதிவு: இந்நிலையில் இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த விவகாரம் குறித்து இன்றைய தினம் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினத்தை யோட்டி ஒரு பதிவினை அவர் மேற்கொண்டுள்ளார். இதில் இன்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி அனைத்து பெண்களும் சிவபெருமானிடம் கூட்டுப் பிரார்த்தனை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இனி எந்த பெண்ணுக்கும் எந்த பெண் குழந்தைக்கும் இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மனிதர்களாக உலவும் பிசாசுகள்: மனித ரூபத்தில் உலவும் பிசாசுகள் கையில் எந்த இடத்திலும் பெண்கள் சிக்கி சின்னா பின்னமாக கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது போன்ற கேடு கெட்டவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமும் கடவுளும் அவர்களுக்கான தண்டனையை அளிக்காத பட்சத்தில் அந்த பெண் குழந்தைக்காக தன்னுடைய கண்ணீர் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண் குழந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இந்த விஷயத்தை கேட்டபோது தன்னுடைய இதயம் நடுங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X