சூட்டிங் ஸ்பாட்டில் கோபத்தின் உச்சியில் ஐஸ்வர்யா ரஜினி.. அப்படி என்னதான் நடந்தது?
சென்னை : ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது லால் சலாம் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேரக்டர் ரோலில் நடிக்கவுள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூட்டிங்கை விரைவில் முடித்து இந்த ஆண்டிற்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஒரு ஆல்பம் பாடலையும் இயக்கி வெளியிட்டார். தனுஷுடனான 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிவு அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர். இதையடுத்து தன்னுடைய பிட்னஸ், மகன்கள், இயக்கம் என அடுத்தடுத்த கட்டங்களை பிசியாகியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

லால் சலாம் படம்
தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த்தும் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அந்தப் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைகா தயாரிப்பு
லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முன்னதாக இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றபோதிலும் விமர்சனரீதியாக ஐஸ்வர்யா ரஜினிக்கு பெயரை பெற்றுத் தந்தது. குறிப்பாக வை ராஜா வை படத்தில் தனுஷ் ஏற்றிருந்த கேமியோ ரோல் சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் லால் சலாம் படத்தில் ரஜினியின் கேமியோ ரோலும் கவனம் பெற்றுள்ளது.

திருவண்ணாமலை சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. படத்தின் நீதிமன்ற காட்சிகளின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், சூட்டிங் குறித்த செய்தி தெரிந்ததும் நேரில் பார்க்க அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததாக தெரிகிறது. இதையடுத்து சூட்டிங்கை தங்களது செல்போனில் அவர்கள் படம்பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கி, அதிலிருந்த காட்சிகளை பௌன்சர்கள் டெலிட் செய்துள்ளனர்.

கோபமடைந்த ஐஸ்வர்யா ரஜினி
இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மிகுந்த கோபமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க கமிட்டாகியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிறிய விஷயங்களுக்கெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கோபப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவமும் அவரது கோபத்தை கிளறி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











