Aiswarya Rajinikanth: அடுத்தப்படத்திற்கு தயாராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. யாரு ஹீரோ தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியாகி இருந்தது. இந்தப் படம் கலையான விமர்சனங்களை பெற்ற நிலையில் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்தது. முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியிருந்த ஐஸ்வர்யா ரஜினிக்கு இந்த படம் மூன்றாவது படமாக அமைந்தது. அவரது இயக்கத்தில் வெளியான இந்த படம் திரைக்கதையில் சிறப்பாக அமைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை படங்களும் திரைக்கதைக்காக சிறப்பான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான லால் சலாம் படம் அதிகமான புரமோஷன்களுடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்டவர்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: 3 மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கிரிக்கெட் மற்றும் கோயில் திருவிழாவை மையமாகக் கொண்டு இந்த படம் வெளியான நிலையில் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடந்த 9ம் தேதி இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் குறைந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்தப்படம்: இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையவுள்ள படம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் அவர் நடிகர் சித்தார்த்தை லீட் கேரக்டரில் வைத்து படம் இயக்க உள்ளார். லால் சலாம் படம் வசூலில் சிறப்பாக அமைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் மீண்டும் ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விரைவில் அறிவிப்பு: விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது தன்னுடைய அப்பா மற்றும் குழந்தைகள் லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோருடன் தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முன்னணி நடிகரின் மகளாக இருந்த போதிலும் தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் அடுத்தடுத்த படங்களை இயக்க கமிட் ஆகி வருகிறார். நடிகர் தனுஷ் உடனான பிரிவுக்குப் பிறகு அவர் தொடர்ந்து இயக்கத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தான் இயக்குனராகும் வகையில் தன்னுடைய மகன்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததையும் அவர் லால் சலாம் படத்தின் ப்ரோமோஷன்களின்போது பேசியிருந்தார்.
மகன்களின் சப்போர்ட்: அவர்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு கூட தன்னால் நேரம் ஒதுக்க முடியாத சூழலில் அம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தனக்கு அவர்கள் தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத்ததாகவும் அவர் பகிர்ந்திருந்தார். மகன்கள் இருவரும் வளர்ந்துவிட்ட போதிலும் அவர்கள் தான் தன்னுடைய உலகம் என்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதே போல தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் குறித்தும் அவரது சப்போர்ட் குறித்தும் சிலாகித்து பேசியிருந்தார். தன்னுடைய அப்பாவை இயக்குவேன் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார். சித்தார்த்துடன் அவர் அடுத்ததாக இணையும் படம் அவரது இயக்கத்தில் நான்காவது படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











