Aiswarya rajinikanth: அனிருத்தோட டேலண்டை கண்டுபிடிச்சது தனுஷ்தான்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!

சென்னை: ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த 3 படம் மூலம் தான் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், ஒய் திஸ் கொலவெறி பாடல் மிகப்பெரிய வரவேற்பை சர்வதேச அனிருத் உருவாக்கினார். கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர், ஜவான், லியோ படங்களின் வெற்றிப் பாடல்களிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார் அனிருத்.

அடுத்தடுத்து ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக உணர்ந்து பல ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார் அனிருத். தற்போது அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார். கைவசம் டஜனுக்கும் அதிகமான படங்களை வைத்திருக்கிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு. இந்தி என அடுத்தடுத்த மொழி படங்களில் இசையமைத்து வரும் அனிருத் மற்ற மொழிகளிலும் சிறப்பான இசை மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Director Aiswarya rajinikanth hails Dhanush for Introducing Anirudh in his 3 movie

இசையமைப்பாளர் அனிருத்: தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து வெளியான 3 படம் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடங்கினார் இசையமைப்பாளர் அனிருத். இந்தப் படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி இசையமைப்பாளராக தன்னை முன்னேற்றிக் கொண்டுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் அனிருத். அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர், ஜவான், லியோ உள்ளிட்ட படங்கள் அனிருத் இசையில் மிகச் சிறப்பாக அமைந்தன.

வெற்றிப்பட இசையமைப்பாளர்: ஆண்டுதோறும் பல படங்களுக்கு இசையமைத்துவரும் அனிருத் பல வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார். ரசிகர்களின் நாடித்துடிப்பை சிறப்பாக உணர்ந்து அதற்கேற்ப ஹிட் நம்பர்களை கொடுத்து வருகிறார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியும் வருகிறார். இந்நிலையில் அனிருத்தின் முதல் பட இயக்குனரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது அனிருத் குறித்த சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். அனிருத்தின் இசை திறமையை உணர்ந்த தனுஷ் அவர் சினிமாவிற்கு வர வேண்டும் என்று அவருக்கு முதல் முறையாக பியானோ வாங்கி கொடுத்ததை தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்

அனிருத் டேலண்டை கண்டறிந்த தனுஷ்: தான் அனிருத்தின் உறவினராக இருந்தபோதிலும் அவரை சினிமாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் ஆனால் தனுஷ் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்ததாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தன்னுடைய 3 படம் மூலம் அவரை இசையமைப்பாளராக தனுஷ் மாற்றியதையும் குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படி அவர் செய்யவில்லை என்றால் அனிருத் வெளிநாட்டிற்கு சென்று தன்னுடைய மேல்படிப்பை தொடர்ந்து இருப்பார் என்றும் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா, தன்னுடைய அசாத்தியமான திறமை மற்றும் உழைப்பால் அனிருத் தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனிருத் வெற்றிக்கு விதை போட்ட தனுஷ்: அனிருத்தின் திறமை தனுஷிற்கு மட்டுமே தெரிந்திருந்ததாகவும் அதையொட்டி அவர் 3 படம் மூலம் அனிருத்தை சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை என்றால் அவரது பாதையே மாறியிருக்கும் என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு அனிருத்தை மேல்படிப்பிற்காக அனுப்பவிருந்த அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து, கீபோர்ட் வாங்கிக் கொடுத்து அவரது உயர்விற்கு விதை போட்டவர் தனுஷ்தான் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X