Aiswarya rajinikanth: விவாகரத்து குறித்து பேசாம.. ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து தங்களது பிரிவு அறிவிப்பு குறித்து அறிவித்த அவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது பிரிவு குறித்து அறிவித்த நிலையில், தன்னுடைய மகன்களுடன் தன்னுடைய தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனிடையே தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக மீண்டும் டைரக்ஷனில் ஈடுபட உள்ளதாகவும் இதற்கான ஸ்கிரிப்டை ரெடி செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் -ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக காணப்படுகிறார். இருந்தபோதிலும் அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரின் திருமண வாழ்க்கையிலும் அடுத்தடுத்த சிக்கல்கள் எழுந்தன. இதில் சவுந்தர்யா முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனிடையே கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், யாத்ரா, லிஙகா என வளர்ந்த இரு மகன்கள் உள்ள நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷுடன் இணைந்து பிரிவை அறிவித்திருந்தார்.
விவாகரத்திற்கு மனுத்தாக்கல்: தற்போது மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய அப்பா வீட்டில் இருந்து வருகிறார். இதனிடையே தன்னுடைய அப்பா கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரஜினியின் கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனிடையே, தங்களின் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ளனர்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இதையொட்டி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என்ன சொல்லுவார் என்று ரசிகர்கள் மட்டுமில்லாமல் விமர்சகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனுஷ் குறித்து, இத்தனை ஆண்டுகால வாழ்க்கை குறித்து அவர் மனம் திறப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் சாதித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த்தை வைத்து தன்னுடைய படத்தை திட்டமிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் தனுஷும் அடுத்தடுத்த படங்களில் இணைந்து இயக்கத்திலும் நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம்: இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல்நலன் குறித்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் 9 முதல் 1 வரையிலான எண்ணிக்கைகளில் உடல்நலனை காப்பதற்காக அனைவரும் அன்றாட வாழ்க்கையில் செய்யவேண்டியதை அவர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து வொர்க்-அவுட் செய்துவிட்டு தண்ணீர் குடிப்பதாகவும் புகைப்படம் பகிர்ந்துள்ளார். இதில் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அவரது ஆலோசனைகள் காணப்படுகின்றன. விவாகரத்திற்கு அப்ளை செய்ததை தொடர்ந்து முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் விவாகரத்து தொடர்பாக அவர் ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.


Click it and Unblock the Notifications











