வொர்க் அவுட்டை நிறுத்த மாட்டேன்... ஷூ கழண்டாலும் வொர்க் அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : இயக்குநர் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவரது வொர்க் அவுட் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே தற்போது ஏராளமான ரசிகர்கள் அவரை பாலோ செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, வொர்க் அவுட்டை நிறுத்த மாட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி

இயக்குநர் அவதாரத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 3 என்ற படத்தை இயக்கியதன்மூலம் எடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. ரஜினியின் மூத்த மகள் என்ற புகழ் இவருக்கு இருந்தாலும் தன்னை இயல்பான பெண்ணாகவே இவர் காட்டிக் கொண்டார். தொடர்ந்து தன்னுடைய குழந்தைகளுக்காக படங்களை இயக்குவதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

தனுஷுடன் பிரிவு முடிவு

தனுஷுடன் பிரிவு முடிவு

குழந்தைகள், குடும்பம் என்று கவனம் செலுத்தி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷை பிரியும் முடிவை எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இருவரையும் இணைக்கும் குடும்பத்தினரின் முயற்சி கைகூடவில்லை. இதையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே தங்களது சினிமா கேரியரை நோக்கிய பயணத்தை தொடர்ந்தனர்.

இசை ஆல்பம் வெளியீடு

இசை ஆல்பம் வெளியீடு

இதனிடையே ஐஸ்வர்யா முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மிகவும் தீவிரமாக சில தினங்களில் மீண்டும் சூட்டிங்கை தொடங்கி, அந்த ஆல்பத்தை 4 மொழிகளில் வெளியிட்டார். தமிழில் ரஜினிகாந்த் அந்த ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்.

ஓ சாதி செல் படம்

ஓ சாதி செல் படம்

மிகவும் எளிமையான மனிதனின் காதல் அந்த ஆல்பத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. எளிமையான கவிதையாக அந்த ஆல்பம் காணப்பட்டது. இதையடுத்து தற்போது பாலிவுட்டில் ஓ சாதி செல் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. தொடர்ந்து தன்னை பிசியாக வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

அதில் ஒன்றாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது மீண்டும் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். எதையொட்டியும் தான் வொர்க் அவுட் செய்வதை விட மாட்டேன் என்று கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.

வொர்க்அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா

வொர்க்அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா

அதற்கேற்றாற்போல வொர்க் அவுட் செய்யும்போது அவரது ஷூ ஒன்று கழன்று விட, உடனே இரண்டு ஷூக்களையும் கழற்றிவிட்டு தனது வொர்க் அவுட்டை தொடர்கிறார். அவருடைய தீவிரம் இந்த வீடியோவில் வெளிப்படுகிறது. இவர் தனது பாலிவுட் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X