Aishwarya rajinikanth: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா பளீச்!
சென்னை: கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தன்னுடைய அப்பாவும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் மேலும் நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விளையாட்டை மையமாக கொண்டு, அரசியல் பேசும் படமாக லால் சலாம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலரும் வெளியாகவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் ட்ரெயிலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஐஸ்வர்யா ரஜினி, நிரோஷா, செந்தில் உள்ளிட்டவர்கள் பங்கேற்று படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், படத்தின் கதைக்களம் குறித்து பகிர்ந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து முடித்துள்ளார். இன்னும் 4 நாட்களில் இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளது அதிகமான எதிர்பார்ப்பை உண்டு செய்துள்ளது.
லால் சலாம் பட பிரமோஷன்: இந்தப் படத்தின் பிரமோஷன்களில் அடுத்தடுத்து விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனமும் அடுத்தடுத்த போஸ்டர்கள் கிளிம்ப்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஐஸ்வர்யா ரஜினி, செந்தில், நிரோஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்று படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் கதையை வெளிப்படையாக கூறினார்.
லால் சலாம் படத்தின் கதை: ஒரு ஊரில் நடக்கும் தேர் திருவிழா மற்றும் அந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் பிரச்சினை காரணமாக அந்த ஊரில் என்னமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது என்பதே படத்தின் கதை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு வினையாக முடிவதை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விளையாட்டில் அரசியல் கலந்தால் என்னமாதிரியான விளைவு ஏற்படும் என்பதும் இந்தப் படம் கூறுறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த பிரச்சினைகளுக்கிடையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாகவும் கஷ்டப்பட்டால் மட்டுமே நமக்கு சிறப்பு கிடைக்கும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் செந்தில் கேரக்டர்: இந்தப் படத்தின் கதைக்களம் அரசியல் கலந்தே உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் அதிகமான நடிகர்கள் இணைந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள தன்னை நம்பி தயாரிப்பாளர்கள் இந்த பிராஜக்டை கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் செந்தில் வாழ்ந்துள்ளதாகவும் படத்தில் அவரது கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். அவர் தன்னுடைய படத்தில் இணைந்தது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











