மாடர்ன் அவுட்பிட்டில் ஐஸ்வர்யா ரஜினி எடுத்த போட்டோஷுட்.. அடுத்த அதிரடி!
சென்னை : இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி வீடு, ஜிம், அடுத்தப்படத்திற்கான ஏற்பாடுகள் என பிசியாக காணப்படுகிறார்.
நடிகர் தனுஷ் உடனான பிரிவு அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து தன்னுடைய உடல்நலன், மனநலன்மீது அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இருக்கும் இவர், தன்னுடைய அடுத்தடுத்த முக்கியமான நிகழ்வுகளை தொடர்ந்து அப்டேட் கொடுத்து வருகிறார்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஐஸ்வர்யாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. முதல்முறையாக அவர் இயக்கிய 3 படத்தின் பாடல்கள் கவனம் பெற்றன.

உடல்நலனில் அக்கறை
தனுஷுடனான 18 ஆண்டுகள் திருமண பந்தத்தை முறிக்கும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஐஸ்வர்யா, தொடர்ந்து தன்னுடைய சொந்த உடல்நலனில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் மனநலனிலும் தன்னை சிறப்பாக வைத்துக் கொள்ளும்வகையில் ஆன்மிகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
தற்போது ஐஸ்வர்யா ரஜினி இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார். தொடர்ந்து வொர்க் அவுட் மற்றும் சைக்கிளிங் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆடி மாதத்தில் இவரை அதிகமான கோயில்களிலும் பார்க்க முடிந்தது.

தொடர்ந்து பிசி
மேலும் தன்னுடைய தந்தையுடன் டெல்லி பயணங்களிலும் இவரை காண முடிந்தது. தொடர்ந்து தன்னை எப்போதும் பிசியாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் காட்டுகிறார் ஐஸ்வர்யா. தன்னுடைய மகன்களிடமும் அதிகமான பாசத்தை கொடுத்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட்டிலும் படம் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய போட்டோஷுட்
இந்நிலையில் தற்போது இவர் மாடர்ன் லுக்கில் புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 40 வயதான நிலையிலும் தன்னுடைய தொடர் வொர்க் அவுட்டால் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்படும் ஐஸ்வர்யா ரஜினிக்கு இந்த அவுட்பிட் மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











