Demonte Colony 2 Box Office: ரசிகர்கள் கொண்டாடும் டிமான்ட்டி காலனி 2.. முதல் நாள் வசூல் விபரம் இதோ!
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிமான்ட்டி காலனி 2 படத்தின் முதல் நாள் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான். முதல் பாகத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்பதால் இரண்டாம் பாகத்தில் படத்தினை எங்கிருந்து தொடங்கப்போகின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார் இயக்குநர்.

அதேபோல் 2015ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகின்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமா என்ற கேள்வி திரை உலகில் எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள், படம் நல்லா இருக்கு. இப்ப எல்லாம் த்ரில்லர் படம் என்றால் சொதப்பி விடுகின்றார்கள். ஆனால் இந்தப் படம் சூப்பராக உள்ளது. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை, படத்தின் இறுதிக்காட்சி வரையும் படத்தினை பார்க்கலாம் எனக் கூறியுள்ளனர்.
குடும்பமாக பார்க்கலாம்: ரசிகர்கள் மத்தியில் அருள்நிதியின் நடிப்பிற்கு தனி பாராட்டுகள் கிடைத்து வருகின்றது. குறிப்பாக " படம் நன்றாக இருக்கின்றது. மற்றப்படங்களை விடவும் இந்தப் படத்தில் அருள்நிதியின் நடிப்பு சிறப்பாக உள்ளது. படம் முழுக்க எதையோ பறிகொடுத்ததைப் போல் இருக்கின்றார். படத்தினை இளைஞர்கள் தொடங்கி, குடும்ப ஆடியன்ஸ் வரை அனைவரும் பார்க்கலாம். பிரியா பவானி சங்கரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது எனக் கூறியுள்ளனர்.

சாம் சி.எஸ்: அதேபோல், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்க்காக படத்தினை பார்க்கலாம் எனும் அளவிற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் ஒரு காட்சிகூட பிழை இல்லாமல் எடுத்துள்ளனர் என ரசிகர்களின் பாராட்டு மழையில் டிமான்ட்டி காலனி 2 படக்குழுவினர் உள்ளனர்.
வசூல் விபரம்: படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 3.5 கோடிகள் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விடுமுறை தினம் மற்றும் வார இறுதி நாட்கள் வரவுள்ளதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் முதல் நாள் வசூலை விடவும் அதிகமாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகின்றது. அதேபோல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் வரும் நாட்களில் படத்தின் காட்சிகளும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்பதால் வசூல் இன்னும் அதிகமாகலாம் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











