Demonte Colony 2 Box Office: பிரியா பவானி சங்கரை தலைநிமிரச் செய்த டிமான்ட்டி காலனி 2 வசூல் விபரம்!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் ஒருவர். ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்ட்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிமான்ட்டி காலனி 2 படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்பதால் இரண்டாம் பாகத்தில் படத்தினை எங்கிருந்து தொடங்கப்போகின்றார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. மேலும் ட்ரைலரில் அருள்நிதி உயிருடன் இருப்பது போல காண்பிக்கப்பட்டதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்தது. படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு எந்தவிதமான சொதப்பலும் இல்லாமல் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார் இயக்குநர்.

Demonte Colony 2 Demonte Colony 2 Box Office

ரசிகர்கள் பாராட்டு: அதேபோல் 2015ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமா என்ற கேள்வியை திரை உலகில் பலரும் எழுப்பி வந்தனர். ஆனால் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து நல்ல கமெண்ட்டுகளையே கூறி வருகின்றனர். குறிப்பாக, படம் நல்லா இருக்கு, மியூசிக் சூப்பரா வொர்க்-அவுட் ஆகியிருக்கு. இப்ப எல்லாம் த்ரில்லர் படம் என்றால் சொதப்பி விடுகின்றார்கள். ஆனால் இந்தப் படம் சூப்பராக உள்ளது. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை, படத்தின் இறுதிக்காட்சி வரையும் படத்தினை பார்க்கலாம் எனக் கூறினர். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் விபரம்: படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 3.5 கோடிகள் வசூல் செய்துள்ளது என நேற்றே தகவல்கள் வெளியாகியானது. மேலும் விடுமுறை தினம் மற்றும் வார இறுதி நாட்கள் வரவுள்ளதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் முதல் நாள் வசூலை விடவும் அதிகமாக வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் படம் ரூபாய் 2.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் முதல் இரண்டு நாளில் ரூபாய் 6 கோடிகளை வசூல் செய்துள்ளது. அதேபோல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் வரும் நாட்களில் படத்தின் காட்சிகளும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்பதால் வசூல் இன்னும் அதிகமாகலாம் என கூறப்படுகின்றது.

Demonte Colony 2 Demonte Colony 2 Box Office

பிரியா பவானி சங்கர்: டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ரசிகர் ஒருவர், பிரியா பவானி சங்கரை எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து, தலை நிமிர்ந்து நடங்க பிரியா பவானி சங்கர். நீங்க நடிச்ச படம் ஹிட் ஆகிடுச்சு என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பிரியா பவானி சங்கர், நான் எப்பவும் தலை நிமிர்ந்து தான் சார் நடந்துட்டு இருக்கேன் என நச்சுனு பதில் சொல்லி உள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Demonte Colony 2 Demonte Colony 2 Box Office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X