Demonte Colony 2 BOC: சத்தமே இல்லாமல் சம்பவம்.. டிமான்ட்டி காலனி 2 வசூல் மட்டும் இத்தனை கோடிகளா?

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து, இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியையும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் சினிமா படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம், அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது. டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் விபரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களில் பேய் படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அரண்மணை 4 படம் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்து மிரட்டியது. அதேபோல் தமிழ் சினிமாவில் வெளியான பேய் படங்களில் டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிமான்ட்டி காலனி படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட படம். அதேபோல் எதேதோ படங்களுக்கெல்லாம் இரண்டாம் பாகம் எடுக்கின்றார்கள், இந்தப் படத்திற்கு எடுத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களே இணையத்தில் அதிகம் விவாதித்தனர்.

demonte colony 2 demonte colony 2 box office

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. ஆனால் படத்தின் இறுதியில் அருள்நிதி இறந்துபோவார், ஆனால் ட்ரைலரில் அருள்நிதி உயிருடன் இருப்பது போல காண்பிகப்பட்டதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்தது. படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு எந்தவிதமான சொதப்பலும் இல்லாமல் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார் இயக்குநர்.

ரசிகர்கள் பாராட்டு: அதேபோல் 2015ஆம் ஆண்டு வெளியான படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியானது என்றாலும், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையில் ஏற்படுத்திய சீக்குவன்ஸ் என்பது பலராலும் பாராட்டப்பட்டது. . இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமா என்ற கேள்வியை திரை உலகில் பலரும் எழுப்பி வந்தனர். ஆனால் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து நல்ல கமெண்ட்டுகளையே கூறி வருகின்றனர். குறிப்பாக, படம் நல்லா இருக்கு, மியூசிக் சூப்பரா வொர்க்-அவுட் ஆகியிருக்கு. இப்ப எல்லாம் த்ரில்லர் படம் என்றால் சொதப்பி விடுகின்றார்கள். ஆனால் இந்தப் படம் சூப்பராக உள்ளது. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை, படத்தின் இறுதிக்காட்சி வரையும் படத்தினை பார்க்கலாம் எனக் கூறினர். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

demonte colony 2 demonte colony 2 box office

வசூல் விபரம்: படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து இதுவரை ரூபாய் 55 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களிலேயே ரூபாய் 10 கோடிகளை வசூல் செய்தது. மேலும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்ததால், நாளுக்கு நாள் வசூல் அதிகம் ஆகிக்கொண்டே போனது. இதனால் படம் வெளியாகி இரண்டு வாரங்களில் ரூபாய் 55 கோடி வசூல் செய்துள்ளது என படக்குழுவே தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் உற்பத்தி செலவை விட படத்தின் வசூல் என்பது, பல மடங்கு அதிகம் என்பதால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

demonte colony 2 demonte colony 2 box office

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X