Demonte Colony 2 Public Review: இதுதான் உண்மையான ஹாரர்.. தியேட்டர்ல பாருங்க.. குவியும் பாராட்டு!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான்.

இந்நிலையில் இன்று டிமான்ட்டி காலனி 2 படத்தினை முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து பார்க்கலாம். படம் பார்த்த ரசிகர் ஒருவர், " படம் நல்லா இருக்கு. இப்ப எல்லாம் த்ரில்லர் படம் என்றால் சொதப்பி விடுகின்றார்கள். ஆனால் இந்தப் படம் சூப்பராக உள்ளது. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை, படத்தின் இறுதிக்காட்சி வரையும் படத்தினை பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

Demonte Colony 2

மற்றொருவர், " படம் நன்றாக இருக்கின்றது. மற்றப்படங்களை விடவும் இந்தப் படத்தில் அருள்நிதியின் நடிப்பு சிறப்பாக உள்ளது. படம் முழுக்க எதையோ பறிகொடுத்ததைப் போல் இருக்கின்றார். படத்தினை இளைஞர்கள் தொடங்கி, குடும்ப ஆடியன்ஸ் வரை அனைவரும் பார்க்கலாம்" எனக் கூறியுள்ளார். படம் நன்றாக உள்ளது. இதுபோன்ற படங்களுக்கு இசை ரொம்ப முக்கியம், அது இந்தப் படத்தில் உள்ளது. படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் சிறப்பாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பமாக பார்க்கலாம்: எனது கணவர் கூட்டி வந்தார் அதனால் வந்தேன், ஆனால் உண்மையிலேயே படம் நன்றாக உள்ளது. குடும்பமாகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம் எனக் கூறினார். மற்றொருவர், படம் ஸ்கிரிப்ட்டாகவே படம் சிறப்பாக உள்ளது. கதையைப் புரிந்து படம் பார்த்தால் ரசிகர்களுக்கு படம் பிடிக்கும் என ஒருவர் கூறினார்.

பிரியா பவானி சங்கர்: முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது படத்தில் தரமான ட்விஸ்ட் வைத்து எடுத்துள்ளார். படம் பார்க்க பயமாக இருந்தது. படத்தினை ஓடிடியில் பார்ப்பதைவிட, இந்தப் படம் தியேட்டரில் பார்க்கவேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம். பிரியா பவானி சங்கர் சிறப்பாக நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான பேய் படங்களில் இந்த படம் மிகவும் தரமான படம். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தினையும் இணைக்கும் காட்சி பாராட்டுக்குரியது. படத்தின் இசையை பாராட்டலாம் என தெரிவித்துள்ளனர்.

Demonte Colony 2

சாம் சி.எஸ்: அதேபோல், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்க்காக படத்தினை பார்க்கலாம் எனும் அளவிற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் ஒரு காட்சிகூட பிழை இல்லாமல் எடுத்துள்ளனர். படம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் பாகம் பார்க்கின்றோம் என்ற உணர்வு இல்லை. அப்படி இருக்கும்போது, படத்தினை கட்டாயம் பார்க்கலாம். குழந்தைகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் படம் தரமாக உள்ளது" என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X