Demonte Colony 2 Twitter Review: வொர்த்! இடைவெளி, க்ளைமேக்ஸ் சூப்பர்.. இன்னொரு முறையும் பார்க்கலாம்!

சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் இந்த படம் , இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதுதான்.

இந்தப் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றார்கள். அதில், ரசிகர் ஒருவர், " படத்தின் முதல் பாகத்தில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்குகின்றது. முதல் பாதி சிறப்பாக உள்ளது. படத்தின் இண்டர்வெல் காட்சி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி பல சுவாரஸ்யங்கள் அடங்கியதாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

Demonte Colony 2

கனெக்‌ஷன்: மற்றொரு ரசிகர், " படம் அருமையாக உள்ளது. குறிப்பாக முதல் பாதி ரசிகர்களை கட்டிப்போடும் அளவிற்கு உள்ளது. இரண்டாம் பாதியும் பிரமாதமாக உள்ளது. முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையேயான கனெக்‌ஷனை சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர். டிமான்ட்டி காலனி 2 ஏற்கனவே வெற்றிப்படம்தான்" என பதிவிட்டுள்ளார்.

கதைத்தேர்வு : அதேபோல்," அருள் நிதி தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படாத நடிகர். அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரமும் கதையும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மற்றொருவர், அருள்நிதியின் கதைத்தேர்வு வழக்கம்போல் மஜாவாக உள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிற்கு இந்தப் படம் சிறப்பான கம்பேக். பிரியா பவானி ஷங்கர் வர்ணிக்க முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதி அட்டகாசமாக உள்ளது. இரண்டாம் பாதி தரம், படத்தினை இன்னொருமுறை கூட பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

Demonte Colony 2

9 ஆண்டுகள்: மற்றொருவர், " டிமான்ட்டி காலனி 2 படம் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எனது ஃபேவரெட்டான ஹாரர் படமாக அமைந்துள்ளது. அருள் நிதி சிறப்பான கதைத் தேர்வினால் நம்மைத் திருப்தி படுத்துகின்றார். படம் வெற்றிப்படம்தான்" என பதிவிட்டுள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கூறுகையில், " முதல் பாகத்தில் அனைவரும் இறந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது படத்தில் தரமான ட்விஸ்ட் வைத்து எடுத்துள்ளார். படம் பார்க்க பயமாக இருந்தது. படத்தினை ஓடிடியில் பார்ப்பதைவிட, இந்தப் படம் தியேட்டரில் பார்க்கவேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம். பிரியா பவானி சங்கர் சிறப்பாக நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான பேய் படங்களில் இந்த படம் மிகவும் தரமான படம். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தினையும் இணைக்கும் காட்சி பாராட்டுக்குரியது. படத்தின் இசையை பாராட்டலாம் என தெரிவித்துள்ளனர்.

Demonte Colony 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X