Demonte colony 2: சூட்டிங்கை நிறைவு செய்த டிமான்ட்டி காலனி 2 டீம்.. விரைவில் சூப்பர் அப்டேட்!
சென்னை: நடிகர் அருள்நிதி -இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற படம் டிமான்ட்டி காலனி.
பேய்களை காமெடி டிராக்கில் கொண்டு சென்ற காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் மீண்டும் ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகபெரிய வசூலை குவித்தது. ஒரே வீட்டில் நடக்கும்படியான கதைக்களத்தை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார் அஜய் ஞானமுத்து.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங் நிறைவு: நடிகர் அருள்நிதி, சனத், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி. பேய்களை காமெடி டிராக்கில் கொண்டு சென்ற காலகட்டத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது. பேய் படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல வைத்தது. குறைந்த பட்ஜெட்டில் ஒரே வீட்டில் இந்தப் படத்தின் பெரும்பாலான சூட்டிங் நடத்தப்பட்டது.
ஆனாலும் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் படக்குழுவினருக்கு பெற்றுத்தந்தது. அருள்நிதி கேரியரில் மட்டுமில்லாமல் அஜய் ஞானமுத்துவிற்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. அவரது அறிமுகப்படம் என்பதை தாண்டி இந்தப் படத்தை அவர் சிறப்பாக கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். மேலும் திரைக்கதையைம் அவரே மேற்கொண்டு, படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சூட்டிங் நடந்துவந்த இந்தப்படம் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் தயாராகுமாறும் கூறியுள்ளார். படத்தின் சூட்டிங் தொடர்ந்து 61 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில், சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ள நிலையில், படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முதல் பாகத்தில் அருள்நிதிக்கு ஜோடி இல்லை. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். இவர் கதையோட்டத்தில் எப்படி இணைக்கப்பட்டிருப்பார் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஹாரர் ஜானரில் சிறப்பான ட்ரெண்டை உருவாக்கிய படம் டிமான்ட்டி காலனி. இந்தப் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தற்போதும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் கொடுத்த தாக்கத்தை அடுத்து தற்போது இரண்டாவது படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மற்றும் விமர்சகர்களிடையேயும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஓசூர் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











