Director Ajay Gnanamuthu: பாலிவுட்டில் படமியக்கும் டிமான்ட்டி காலனி இயக்குநர்.. ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: நடிகர் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிமான்ட்டி காலனி 2. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராகிவருகிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து: டிமான்ட்டி காலனி என்ற படத்தினை இயக்கி மிகப்பெரிய கவனத்தை பெற்றவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. தொடர்ந்து இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கியதன்மூலம் கோலிவுட்டில் இவரது புகழ் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது டிமான்ட்டி காலனி 2 என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
டிமான்ட்டி காலனி 2 படம்: கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது டிமான்ட்டி காலனி படம். அருள் நிதி, ராஜ்திலக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் த்ரில்லர் பாணியில் உருவாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறைவான முதலீட்டில் உருவான இந்தப் படம் அதிகமான வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
ஹாரர் த்ரில்லர் படம்: படத்தில் அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவந்தராஜன், அர்சசனா ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து அஜய் ஞானமுத்துவும் தயாரித்துள்ளார். படத்தை சிறப்பாக திட்டமிட்டு 61 நாட்களில் சூட்டிங்கை முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
பாலிவுட்டில் படமியக்கும் அஜய் ஞானமுத்து: விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இமைக்கா நொடிகள், டிமான்ட்டி காலனி என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அஜய் ஞானமுத்து தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் இவர் இயக்கவுள்ள அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அஜய் ஞானமுத்து அடுத்ததாக பாலிவுட்டில் படமியக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜய் தேவ்கனை இயக்கும் அஜய் ஞானமுத்து: அடுத்ததாக அஜய் ஞானமுத்துவிற்கு பாலிவுட்டில் அஜய் தேவ்கனை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











