twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல புராடக்ட் வேணும்.. அதுக்குதான் மற்ற எழுத்தாளர்களை பயன்படுத்தினேன்.. கோப்ரா இயக்குநர் கருத்து!

    |

    சென்னை : நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது கோப்ரா படம்.

    Recommended Video

    இப்படித்தான் ரகளை பண்ணனும், Chiyan Vikram mass speech | cobra promotion *kollywood

    இந்தப் படத்தின் ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது படக்குழு பிரமோஷன் டூரில் ஈடுபட்டுள்ளது.

    விக்ரம் உள்ளிட்டவர்கள் இந்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ள நிலையில் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

    செல்ஃபி எடுத்த அண்ணாச்சி..உங்கள நீங்களே மதிக்கலனா எப்படி?.. கருத்து சொன்ன இயக்குநர்!செல்ஃபி எடுத்த அண்ணாச்சி..உங்கள நீங்களே மதிக்கலனா எப்படி?.. கருத்து சொன்ன இயக்குநர்!

    கோப்ரா படம்

    கோப்ரா படம்

    நடிகர் விக்ரமின் மகான் படத்திற்கு பிறகு கோப்ரா படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளனர்.

    வித்தியாசமான கெட்டப்புகள்

    வித்தியாசமான கெட்டப்புகள்

    இந்தப் படத்தில் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். சில கெட்டப்புகள் இது விக்ரமா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. படத்தை பார்ப்பதற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி இந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளன.

    பிரமோஷன் டூர்

    பிரமோஷன் டூர்

    இந்நிலையில் கோப்ரா படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் டூரை அறிவித்த படக்குழு திருச்சியில் துவங்கி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த பிரமோஷன் பணிகளை நடத்தி வருகின்றனர். விக்ரம், ஸ்ரீநிதி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

    ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

    செல்லும் இடங்களில் எல்லாம் படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். கோப்ரா படம் மற்ற விக்ரம் படங்களின் கலெக்ஷனை பீட் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் மற்ற படங்களின் கலெக்ஷனையும் பீட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    அஜய் ஞானமுத்து பேட்டி

    அஜய் ஞானமுத்து பேட்டி

    இந்தப் படத்தின் பிரமோஷன்களில் கலந்துக் கொள்ளாத படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனிப்பட்ட முறைகளில் பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இந்தப் படத்தின் எழுத்துப் பணிகளில் அஜய் ஞானமுத்து தவிர்த்து 5 எழுத்தாளர்கள் இணைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    எழுத்தாளர்களை கௌரவப்படுத்துவது அவசியம்

    எழுத்தாளர்களை கௌரவப்படுத்துவது அவசியம்

    அதற்கு பதிலளித்துள்ள அஜய் ஞானமுத்து, ஒரு படம் சிறப்பாக அமைய வேண்டி உதவி இயக்குநர்கள் உள்ளிட்டவர்களிடம் சிறப்பான வேலையை வாங்கி, அவர்களின் அந்த பங்களிப்பிற்காக அவர்களின் பெயரை வெளிப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்துவதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நல்ல புராடக்ட் மட்டுமே முக்கியம்

    நல்ல புராடக்ட் மட்டுமே முக்கியம்

    தனக்கு நல்ல புராடக்ட் மட்டுமே முக்கியம் என்றும் அதற்காக தான் மற்றவர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதில் எந்தவிதமான தயக்கமும் காட்ட மாட்டேன் என்றும் இதை ஆரோக்கியமான விஷயமாகவே தான் பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    கோப்ராவில் இன்னாசி பங்களிப்பு

    கோப்ராவில் இன்னாசி பங்களிப்பு

    கோப்ரா படத்தில் இன்னாசி என்பவர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அவர் முன்னதாக தன்னுடைய இமைக்கா நொடிகள் படத்திலிருந்து தன்னுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அஜய் மேலும் குறிப்பிட்டுள்ளார். இன்னாசி இயக்கத்தில் தற்போது டைரி படம் ரிலீசாகியுள்ளது.

    English summary
    Director Ajay Gnanamuthu on Actor Vikram's Cobra movie writers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X