திக் திக் நிமிடம்... டிமான்ட்டி காலனி 3.. அப்டேட் கொடுத்த இயக்குநர்!
சென்னை: ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகி தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் தான் டிமென்ட்டி காலனி 2. இந்தபடத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கம், அருண்பாண்டியன், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், புத்த துறவியாக வரும் டோர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்ட்டி காலனி 3 குறித்த தகவலை இயக்குநர் கொடுத்துள்ளார்.
2015ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 'டிமான்ட்டி காலனி' அதிரடியான திகிலூட்டும் திரைப்படமான இப்படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரே ஒரு இரவில் வீட்டிற்குள் நடக்கும் பேயின் அட்டகாசம் ரசிகர்களுக்கு திகிலூட்டியது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து,7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து: டிமான்ட்டி காலனி முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அஜய் ஞானமுத்து விக்ரமனை வைத்து கோப்ரா படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் தோல்வியைத் தழுவியதை அடுத்து தற்போது டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
விறுவிறுப்பான கதை: முதல் பாகத்தில், வீட்டிலிருந்து தப்பிக்கும் அருள்நிதி, உயிரிழப்பதைப் போல காட்சி காட்டப்பட்டு இருக்கும். அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. அதில் அருள்நிதி, கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய சகோதரர் ரகுவாக அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர், தந்தையின் சொத்து தனக்கு மட்டுமே வர வேண்டும் என்று போராடுகிறார். இன்னொரு பக்கம், அன்புக் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் பிரியா பவானி சங்கர் அதைப் புத்தத் துறவி உதவியுடன் தெரிந்து கொள்ள நினைக்கிறார்.
பிரியாமணி சூப்பர்: இந்த மூவரின் கதையும் ஒரு புள்ளியில் இணைய வைத்து, ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்துள்ளார் இயக்குநர். இவர்களுடன் உயிரைக் காவு வாங்க நினைக்கும் 'டிமான்ட்டி காலனி' பேயின் ஆத்திரமும் தெரிய வருகிறது. அதைத் தடுக்க அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை. அருள்நிதிக்கு இரட்டை வேடமாக தனது கதாபாத்திரத்தை அழகாகச் செய்திருக்கிறார். கணவரை இழந்து வாடும் பெண்ணாக சிறப்பான வழங்கியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். நாயகனைவிட இவருக்குத்தான் அழுத்தமான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மகத்தான வசூல்: விக்ரமனின் தங்கலான் படத்துடன் இந்த படம் வெளி வந்திருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது டிமான்ட்டி காலனி திரைப்படம் தான். இப்படம் முதல் நாளில்,3 கோடி முதல் 4 கோடி வரை வசூலித்த நிலையில், படம் 4 நாளில் ரூ. 21 கோடி வசூல் ஈட்டியுள்ளது என தகவல்கள் வெளியாக உள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் பாகம்: இந்நிலையில், டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் அடுத்த பாகத்தை குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், இரண்டாம் பாகம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாகத்தை தொடர்ந்து மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளேன். அடுத்த வேறு ஒரு படத்தை இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்க உள்ளேன். மூன்றாம் பாகம் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











