இப்பவே அதை சொன்னா அவ்ளோதான்... விக்ரம் இயக்குனர் மூச்
சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்தார்.
அருள்நிதி நடித்த டிமான்டி காலனி, நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
இது விக்ரமுக்கு 58-வது படம். கதாநாயகியாக, ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஜே.ஜி.எப் படத்தில் நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசை
இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.

மோஷன் போஸ்டர்
அமர், கோப்ரா என்று சமுக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், கோப்ரா என்று டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் மோஷன் போஸ்டரில் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் கேரக்டர்
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் விக்ரம் கேரக்டரை ரசிகர்கள் ஆவலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த டைட்டில் பற்றி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறும்போது, டைட்டிலுக்கும் விக்ரம் கேரக்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்றார்.

3 மொழிகளில்
அவர் மேலும் கூறும்போது, டைட்டில் பற்றி இன்னும் சொன்னால், எல்லாவற்றையும் சொன்னது போலாகிவிடும். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. அனைத்து மொழிக்கும் ஏற்ற தலைப்பு தேவை என்பதால் இதை வைத்துள்ளோம்.

ஐரோப்பாவில்...
படத்தின் சென்னை ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறோம். ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம் அங்கு செல்கிறோம். ஜனவரி கடைசியில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றார்.


Click it and Unblock the Notifications











