உள்ளாடையுடன் நிற்கச் சொன்னார், வெர்ஜினா என கேட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

By Siva

மும்பை: ரூ. 100 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் மீது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

லவ் ரஞ்சன் இயக்கத்தில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் லவ் ரஞ்சன் மீது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது,

பாலிவுட்

பாலிவுட்

குட்டை பாவாடையும், டைட்டான டாப்பும் அணிந்து வருமாறு கூறினார்கள். இது பாலிவுட்டில் சகஜம் என்பதால் அந்த உடை அணிவதில் எனக்கு பிரச்சனை இல்லை. 7 முதல் 8 பெண்கள் வந்திருந்தனர். வழக்கமாக நடித்துக் காட்ட சொல்வார்கள். ஆனால் அந்த ஆடிஷனில் வசனமே கொடுக்கவில்லை. இது வெறும் லுக் டெஸ்ட் என்றார்கள்.

பெண்கள்

பெண்கள்

நான் குமார் மங்கத் அலுவலகத்தில் இருந்தேன். அவரின் மகன் அபிஷேக் பதக் தான் தயாரிப்பாளர். இயக்குனர் லவ் ரஞ்சன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழைத்தார்கள். எனக்கு முன்பு சென்ற பெண் வெளியே வந்தபோது அவர் முகம் வெளிரிப் போய் இருந்தது. அவசர அவசரமாக அங்கிருந்து சென்றார்.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

அடுத்ததாக அறைக்குள் சென்ற என்னிடம் என் விபரங்களை கேட்டனர். படத்தில் பிகினி மற்றும் முத்தக் காட்சி உள்ளது. அதில் நடிக்க தயாரா என்று இயக்குனர் என்னிடம் கேட்க சம்மதம் என்றேன். பிகினியில் நான் எப்படி இருப்பேன் என்பதை பார்க்க வேண்டும் என்றார் லவ் ரஞ்சன். ஆடையை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் நிற்குமாறு அவர் கூறினார்.

முடியாது

முடியாது

பிகினி காட்சிக்காக நான் என் உடல் எடையை குறைக்க வேண்டுமா என்பதை பார்க்க வேண்டும் என்றார் லவ் ரஞ்சன். நாங்கள் எதையும் ரெக்கார்டு செய்யவில்லை, ஒளிப்பதிவாளர் அறையை விட்டு வெளியே போய்விடுவார் என்றார் இயக்குனர். எனக்கு சங்கடமாகிவிட்டது. என்னால் முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

முன்னதாக அவர் எனக்கு காதலன் இருக்கிறாரா என்று கேட்டார். ஆமாம் என்று கூறியதற்கு நீங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறீர்களா என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. ஆணுறை பயன்படுத்துவீர்களா, சுய இன்பம் அனுபவிப்பீர்களா என்று எல்லாம் கேட்டார் என்று அந்த நடிகை தெரிவித்தார். ஆனால் அவரின் குற்றச்சாட்டை லவ் ரஞ்சன் மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X